சிங்காரம் பிள்ளை பள்ளி இடத்தை விற்றது சட்டவிரோதம்: பள்ளிக் கல்வித்துறை இடத்தை உடனே மீட்க சிபிஎம் வலியுறுத்தல்
16 Jul 2026, 11:41 pm
<p><strong>சிங்காரம் பிள்ளை பள்ளி இடத்தை விற்றது சட்டவிரோதம்: பள்ளிக் கல்வித்துறை இடத்தை உடனே மீட்க சிபிஎம் வலியுறுத்தல்</strong></p><p>சென்னை, ஜூலை 16- சென்னை வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளியின் இடத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் உறுதியளித்துள்ளார். சென்னை வில்லிவாக்கம் பகுதி யில் உள்ள சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளி இடத்தை சட்ட விரோதமாக விற்பனை செய்ததைக் கண்டித்தும், அந்த இடத்தை மீட்டு மீண்டும் கல்விப் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தியும் கடந்த 5 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2024 ஜூலை 31 அன்று விரிவான விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சிபிஎம் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பனை நேரில் சந்தித்து மனு அளித்தார். உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.முருகன் மற்றும் வில்லி வாக்கம் பகுதி செயலாளர் சி.மார்ட்டின் ஆகியோர் உடனிருந்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட இயக்குநர் கண்ணப் பன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரி கள் நடத்திய விரிவான ஆய்வில், அந்தப் பள்ளி இடத்தை விற்றதும் வாங்கியதும் சட்டவிரோதம் என்பது உறுதி செய்யப்பட்டு, அது குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்ட தாகத் தெரிவித்தார். இதனைச் சுட்டிக்காட்டிய கட்சி யினர், சட்டவிரோதமாக விற்கப்பட் டது உறுதியான நிலையில், சம்பந்தப்ப ட்டவர்கள் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இடத்தை மீட்க தாமதம் ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த இயக்குநர், இனி அத்தகைய நடவடிக் கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். கடந்த 2020 முதல் கே.பாலகிரு ஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், கே.கனக ராஜ் உள்ளிட்ட கட்சித் தலைவர் களின் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாகவே தற்போது இந்த உண்மை வெளிச்சத் திற்கு வந்துள்ளது. எனவே, வணிக வளாகமாக மாற்றப்பட்டுள்ள பள்ளி இடத்தைக் கல்விப் பயன்பாட்டிற்கு உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என்றும், சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜி.செல்வா ஒரு அறிக்கையில் வலியுறுத்தியுள் ளார்.</p>
