தீக்கதிர் முக்கிய செய்திகள்
28 May 2026, 9:50 pm

‘சிங்கப்பெண்’ திட்டம்; துவக்க விழா திடீர் ரத்து!

சென்னை, மே 28 - தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெள்ளிக்கிழமை (மே 29) அன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்த திட்டத்தின் தொடக்க விழா ரத்தாகியுள்ளது. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள்: சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்.பி. தனபால்!

சென்னை, மே 28 - நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்த 4 சட்டமன்ற உறுப்பினர்களின் பின்னணியை ஆராய வேண்டும் என அதிமுக எம்.பி. தனபால் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தை காக்க ஒன்றிய பாஜக அரசு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அமலாக்கத் துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தனபால் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக விவகாரத்தில் முடிவைத் தள்ளிப் போடும் சபாநாயகர்?

சென்னை, மே 28 - கொறடா உத்தரவை மீறி, நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள் 25 பேரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அளித்திருந்தார். பதிலுக்கு, எஸ்.பி. வேலுமணி தான் தங்களின் சட்டமன்றக்குழுத் தலைவர் என்றும் ஒரு கடிதம் சபாநாயகரிடம் அளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, எடப்பாடி பழனிசாமியுடன், எஸ்.பி. வேலுமணி தரப்பு சமாதானமாக சென்றதையடுத்து, இரண்டு தரப்புமே முன்பு அளித்திருந்த கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், அதிமுக சட்டமன்றக்குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்றும் புதிய கடிதத்தை அளித்தனர். இந்த விவகாரத்தில் வியாழக்கிழமை (மே 28) அன்று முடிவெடுப்பதாக தெரிவித்திருந்த சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், பக்ரீத் பண்டிகை விடுமுறை யால் தலைமைச் செயலகத்திற்கு வரவில்லை.

தவெக-வுக்குத் தாவிய வெல்லமண்டி நடராஜன்!

சென்னை, மே 28 - 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வி யடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. இதையடுத்து, அதிமுக எம்எல்ஏ-க்கள் உட்பட முக்கியப் பிரமுகர்கள் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். இதற்கு முன்னர், எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த நான்கு அதிமுக எம்.எல்.ஏ.க்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி தவெகவில் இணைந்திருந்தனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தன் மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார். இது குறித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தவெகவில் மாற்றுக் கட்சியினருக்கு குடும்பத்தினர் போல் மரியாதை கொடுக்கப்படுவதை பார்த்தே அவர்கள் வருகிறார்கள். இன்னும் ஒரு மாதத்திற்குள் 90 சதவிகித அதிமுக நிர்வாகிகளும் தவெகவை நோக்கி வருவார்கள்” என்று தெரிவித்தார்.

மூடுவதாக உறுதியளித்த பிறகும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை!

அரியலூர், மே 28 - அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தா. பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் 100 மீட்டருக்கும் குறைவான தொலைவில் அரசு மாணவியர் விடுதி, அரசு மேல்நிலைப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் கோவில் போன்ற வழிபாட்டு தலங்கள் உள்ளன. ஆகையால், இந்த கடையை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற விஜய் தலைமையிலான தவெக அரசு, பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் செயல்படும் 717 டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் செய்யப்படும் என அறிவித்தது. இந்த 717 டாஸ்மாக் கடைகளில், பிரச்சனைக்குரிய இந்த டாஸ்மாக் கடையும் ஒன்றாகும். எனவே, இந்தக் கடையை மூடச்சொல்லி, புதன்கிழமை (மே 27) இரவு சுமார் 7.30 மணியளவில் கடைக்கு முன் திரண்ட பொதுமக்கள், டாஸ்மாக் கடையை இன்றைக்குள் (மே 28) மூட வேண்டும் என தெரிவித்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபானங்களை கடையில் இறக்குவதற்கு வந்த லாரியையும் தடுத்து நிறுத்தி இறக்கவிடாமல் செய்தனர். பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடையை வியாழக்கிழமை மூடிவிடுவதாக உறுதியளித்தனர். ஆனால், வியாழனன்றும் வழக்கம்போல் இந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு, மது விற்பனை நடந்ததால், பெண்கள், பொதுமக்கள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகினர்.

ரூ. 2,500 கோடி பிணையப் பத்திரம் ஏலம்

சென்னை, மே 28 - ரூ. 2,500 கோடி மதிப்புள்ள பிணையப் பத்திரங்கள் வரும் ஜூன் 2-ஆம் தேதி, இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை கோட்டை அலுவலகத்தில் ஏலம் விடப்படும் என நிதித்துறை தெரிவித்துள் ளது. போட்டி ஏலக்கேட்புகள் காலை 10.30 முதல் 11.30 மணிக்கு உள்ளாகவும், போட்டியற்ற ஏலக்கேட்பு கள் காலை 10.30 முதல் 11 மணிக்கு உள்ளாகவும் ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

‘வில் அம்பு’ பட இயக்குநர் மரணம்!

சென்னை, மே 28 - ‘வில் அம்பு’ பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம், உடல்நலக் குறைபாடு காரணமாக, வியாழக்கிழமை (மே 28) அன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 49. எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். இறுதி நிகழ்வுகள், வெள்ளிக்கிழமை அன்று கோவையில் உள்ள அவ ரது சொந்த ஊரான சுகுணா புரத்தில் நடைபெற வுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரி வித்துள்ளனர். அவரது மறைவு திரையுலகத்தைச் சேர்ந்த வர்களையும், ரசிகர்களை யும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.