முந்தய பக்கம்

தேனியில் ரோந்து பணியில் சிங்கப்பெண் சிறப்புப் படையினர்

12 Jun 2026, 10:03 pm
தேனியில் ரோந்து பணியில் சிங்கப்பெண் சிறப்புப் படையினர்
<p><strong>தேனியில் ரோந்து பணியில் சிங்கப்பெண் சிறப்புப் படையினர் </strong></p><p>தேனி,ஜூன் 12- தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம் படுத்தும் வகையில் புதிதாக சிங்கப்பெண் சிறப்பு அதி ரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் சிங்கப்பெண் படை இரு அணிகளாக பெண் சார்பு ஆய்வாளர் தலைமையில் , பெண் காவலர்கள் சுழற்சி முறையில் ரோந்து வாகனத்தை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோந்து பயன்பாட்டிற்கு அனுப்பி வைத்தார். இதன் முக்கிய நோக்கம் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து, குற்ற சம்பவங் கள் நடைபெறாமல் தடுத்து, பொது இடங்களில் பெண்க ளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குதல், பொதுமக்கள் அதிகளவில் செல்லக்கூடிய மற்றும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சட்ட விரோதச் செயல்களை தடுக்கும் பணியை மேற்கொள்வார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram