அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் சிறப்புப் படை விழிப்புணர்வு நிகழ்ச்சி
11 Jun 2026, 11:28 pm
<p><strong>அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் சிறப்புப் படை விழிப்புணர்வு நிகழ்ச்சி</strong></p><p>கடலூர், ஜூன் 11- தமிழக முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்த 'சிங்கப்பெண்' சிறப்புப் படை, கடலூர் மாவட்டத்திலும் செயல் பட்டுக்கு வந்துள்ளது. இதற்கான தொடக்க விழா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக் குமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதனைத் தொட ர்ந்து, கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. உதவி ஆய்வா ளர் லிடியா செல்வி தலை மையிலான 'சிங்கப்பெண்' காவலர் குழுவினர், மாணவிகளிடையே உரை யாற்றினர். அப்போது, மாணவி கள் தங்களைப் பாது காத்துக் கொள்ள வேண்டிய முறைகள் மற்றும் ஏதேனும் அவசர கால உதவிகள் தேவைப் பட்டால், காவல் துறை யின் அவசர உதவி எண்ணான 100-க்குத் தொடர்பு கொண்டால், காவலர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு வந்து உதவி செய்வார்கள் என்பது குறித்து விளக்கமளிக்கப் பட்டது. இந்நிகழ்வில், துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ் இனியன், பொறுப்பு ஆய்வாளர் சந்துரு, உதவி ஆய்வாளர் பிரசன்னா மற்றும் காவல் துறையினர் பலரும் கலந்துகொண்டு மாணவிகளுக்குப் பாது காப்பு குறித்த ஆலோசனை களை வழங்கினர். பள்ளி மாணவிகளின் பாது காப்பை உறுதி செய்யக் காவல்துறை எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு, அப் பகுதியில் பெரும் வர வேற்பைப் பெற்றுள்ளது.</p>
