முந்தய பக்கம்

சிங்கப்பெண் சிறப்பு படைக்கு தற்காலிகமாக 18 அதிகாரிகள் நியமனம்

31 May 2026, 9:36 pm
சிங்கப்பெண் சிறப்பு படைக்கு தற்காலிகமாக 18 அதிகாரிகள் நியமனம்
<p><strong>சிங்கப்பெண் சிறப்பு படைக்கு தற்காலிகமாக 18 அதிகாரிகள் நியமனம்</strong></p><p>சென்னை, மே 31 - தமிழ்நாடு காவல்துறை யின் சிங்கப்பெண் சிறப்பு படைக்கு சைபர் கிரைம், சமூக ஊடகப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவு களிலிருந்து 18 அதிகாரிகள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறைத் தலைவர் அலுவலகம் இது தொடர் பான உத்தரவை வெளி யிட்டுள்ளது. சிங்கப்பெண் சிறப்புப் படையின் காவல் கண்கா ணிப்பாளர் அனுப்பிய கோரிக்கை கடிதத்தின் அடிப்படையில் இந்த நிய மனங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த துணை ஆய்வா ளர்கள் நவீன், திவ்யதங்கம் உள்ளிட்டோர் மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, சமூக ஊடகப் பிரிவு, சென்னை பெருநகர காவல் துறை ஆகிய பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் படையில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர். பணியமர்த்தப்பட்ட வர்களை உடனடியாக விடு வித்து, சிறப்புப் படை காவல் கண்காணிப்பாளர் முன்பு ஆஜராக சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram