சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையில் 390 புகார்களுக்கு நடவடிக்கை சென்னை
18 Jul 2026, 9:40 pm
<p><strong>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையில் 390 புகார்களுக்கு நடவடிக்கை சென்னை</strong></p><p>: பெண் கள், குழந்தைகள் பாது காப்பிற்காக செயல் படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, ஜூலை 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான காலத்தில் 390 புகார் கள் மீது உடனடி நட வடிக்கை எடுத்து, 29 குற்ற வழக்குகளை பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. காணாமல் போன 9 பெண்கள், 9 குழந்தை கள் மீட்கப்பட்டு குடும் பத்தினரிடம் ஒப்படைக்க ப்பட்டதுடன், 3,711 விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 9,572 இடங்களில் கண்கா ணிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. மேலும், 8 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப் பட்டு, 44 பள்ளி இடை நிற்றல் குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். தூத்துக் குடி, தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாலி யல் துன்புறுத்தல், இணைய வழி மிரட்டல் தொடர்பான வழக்கு களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள னர்.</p>
