முந்தய பக்கம்

கடலூர் சிபிஎம் அலுவலகத்தில் எளிமையான முறையில் மத மறுப்புத் திருமணம்

31 Jan 2026, 5:27 pm
கடலூர் சிபிஎம் அலுவலகத்தில் எளிமையான முறையில் மத மறுப்புத் திருமணம்
<p><strong>கடலூர் சிபிஎம் அலுவலகத்தில் எளிமையான முறையில் மத மறுப்புத் திருமணம்</strong></p> <p>கடலூர், ஜன.31- &nbsp;கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தங்குப்பம் மாதா கோவில் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் - இந்திரா காந்தி தம்பதியரின் மகன் ஏ.அரவிந்த் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் - வேளாங்கண்ணி தம்பதியரின் மகள் மெர்லின் ஆகிய இரு வரும் காதலித்து வந்தனர். தங்கள் திருமணத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடத்த வேண்டும் என்ற மணமக்களின் வேண்டு கோளின்படி, சாதி மற்றும் மத மறுப்புத் திருமணம் கடலூர் மாவட்டக் குழு அலு வலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் தலைமை தாங்கித் திருமணத்தை நடத்தி வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் பி.கருப்பையன், ஜே.ராஜேஷ் கண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்நிகழ்வில் ஒன்றியக் குழு உறுப்பினர் அய்யாதுரை, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சின்னத்தம்பி, மாவட்டப் பொருளாளர் கலைவாணன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சௌமியா, சிவ நந்தினி, கனிஷ்கர், சிவன்ராஜ், வாலிபர் சங்க நிர்வாகிகள் தில்லை, சதீஷ், ஒன்றியத் தலைவர் ஞான பிரகாஷ் மற்றும் மணமக்களின் உறவினர்கள் பங்கேற்று வாழ்த்தினர். மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டு, மாங்கல்யம் அணிவித்து எளிமையான முறையில் இல்லறத்தில் இணைந்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram