தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முறைசாரா தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரத்திற்கு வெள்ளிவிழா

11 Jul 2026, 10:41 pm
முறைசாரா தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரத்திற்கு வெள்ளிவிழா

முறைசாரா தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரத்திற்கு வெள்ளிவிழா

இந்தியாவில் 1991ஆம் ஆண்டு புதிய பொரு ளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டது. அரசுத் துறைகளின் பங்கு குறைக்கப்பட்டது. தனியார் முதலீடுகளுக்கு அதிக வாய்ப்பு கள் வழங்கப்பட்டன. பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மய மாக்கப்பட்டன. ஒப்பந்தத் தொழில், அவுட்சோர்சிங், தற்காலிக வேலை வாய்ப்பு போன்ற முறைகள் வேகமாக விரிவடைந்தன. இதன் விளைவாக, நிரந்தர வேலைவாய்ப்புகள் குறையத் தொடங்கின. தொழிற்சாலைகள் தானியங்குமயமாகின. உற்பத்தி நிறுவனங்கள் பலவும் தொழிலாளர் எண்ணிக்கையைக் குறைத்தன. விவசாயத் துறையும் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டது. விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது, கடன் சுமை, காலநிலை மாற்றம், நிலப்பரப்பு சுருங்குதல் போன்ற காரணங்களால் கிராமப்புற மக்கள் பெருமளவில் நகரங்களை நோக்கி இடம்பெயரத் தொடங்கினர். புதிய பொருளாதாரக் கொள்ளை அதன் விளைவால் உருவான நகரமயமாக்கல் தொழி லாளர் வர்க்கத்தில் ஒரு புதிய பிரிவை உருவாக்கியது. உயிர் பிழைப்புக்காக சிறு நிறுவனங்கள், வீட்டு உற்பத்தி, சுயதொழில், கட்டுமானம், போக்கு வரத்து, வீட்டுவேலை, தெருவோர வியாபாரம், உணவகங்கள், சேவைத் துறைகள் போன்ற பல்வேறு தொழில்க ளில் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்யத் தொடங்கினர். இவர்களே முறைசாரா தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். முறைசாரா தொழிலாளர்களின் உழைப்பு இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. வேலைப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, விபத்து நிவாரணம், குறைந்தபட்ச ஊதியம் போன்ற அடிப்படை உரிமைகள் முறைசாரா தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. சட்டரீதியான பாதுகாப்பின்றி வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சங்கத்தின் தோற்றமும் 25 ஆண்டுகாலப் பயணமும்

இந்தப் பின்னணியில்தான் சிஐடியு, முறைசாரா தொழிலாளர்களை அணிதிரட்ட அறைகூவல் விடுத்தது. இதன் ஒருபகுதியாக தென்சென்னை பகுதியில் முறைசாரா தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, "சென்னை மற்றும் புறநகர் முறைசாரா தொழிலாளர்கள் சங்கம்" உருவாக்கப்பட்டது. பதிவு எண் 2715/CNI-யுடன் சட்டப்பூர்வ தொழிற்சங்கமாக செயல்பட்டு வரு கிறது. 25 ஆண்டுகளை நிறைவு செய்து வெள்ளி விழாவைக் கொண்டாடும் இந்தச் சங்கத்தின் பயணம், சாதாரண அமைப்பு வரலாறு அல்ல; ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வாதாரப் போராட்டத்தின் வரலாறாகும். இந்த சங்க உருவாக்கம் ஒரு புதிய சங்கத்தின் தொடக்கம் மட்டுமல்ல; பாதுகாப்பின்றி வாழ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் புதிய நம்பிக்கையின் தொடக்கமாக அமைந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையின் வளர்ச்சி, தாக்கத்தின் காரணமாக முறைசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கட்டுமானம், உடலுழைப்புத் தொழிலாளர்கள், வீட்டு வேலைத் தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் சரக்கு வாகன ஓட்டு நர்கள், தையல் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், கைவினைஞர்கள், தெருவோர வியாபாரிகள், உணவுத் தயாரிப்பு தொழிலாளர்கள், சிறு நிறுவன ஊழியர்கள், விநியோகப் பணியாளர்கள், இணையதள அடிப்படை யிலான (கிக்) தொழிலாளர்கள் என பல நூற்றுக்கணக்கான தொழில்களில் பரந்துபட்டு உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்ததால், புதிய வகை முறைசாரா தொழிலாளர்களும் உருவாகியுள்ளனர். இணையவழி உணவு விநியோக ஊழியர்கள், ஆன்லைன் டாக்சி ஓட்டுநர்கள், கூரியர் விநியோகப் பணியாளர்கள் போன்ற பிரிவினர் உருவாகி உள்ளனர். இவர்களுக்கு நிலையான வேலை ஒப்பந்தமோ, ஓய்வூதியமோ, சமூகப் பாதுகாப்போ இல்லை. இவர்களது உழைப்பிற்கு மதிப்பு இருக்கிறது, ஆனால் வாழ்க்கைக்கு பாதுகாப்பு இல்லை. வேலை இருந்தாலும் ஊதி யத்திற்கு உத்தரவாதம் இல்லை. உடல்நலக் குறைவு ஏற்பட்டால் வரு மானம் இல்லை. விபத்து நேர்ந்தால் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும். முதுமை வந்தால் ஓய்வூதியம் இல்லை. குழந்தைகளின் கல்வி, குடும்பத்தின் மருத்துவச் செலவு, பெண்களின் பாதுகாப்பு, தொழில் உரிமை என ஒவ்வொரு நாளும் பெரும் போராட்டமாகவே முறைசாரா தொழிலாளிகளின் வாழ்க்கை உள்ளது. எனவே, இந்த தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வேண்டும் என கோரினோம். சமூகப் பாதுகாப்பு என்பது அரசின் கருணை அல்ல; உழைக்கும் மக்களின் உரிமை என்ற அடிப்படையில் சிஐடியு தொடர்ந்து போராடியதன் விளைவாக முறை சாரா தொழிலாளர்களுக்கான பல நலவாரியங்களை அரசு உரு வாக்கியது. இவற்றின் மூலம் கல்வி உதவித்தொகை, திருமண நிதி, மகப்பேறு உதவி, இயற்கை மரணம் மற்றும் விபத்து நிவாரணம், ஓய்வூதியம், மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்ட நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. எனினும், வாரியங்களில் பதிவு செய்யப்படாத கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். '

உறுப்பினர் சேர்ப்பிலிருந்து மக்கள் இயக்கமாக'

முறைசாரா சங்கம் தொடங்கப்பட்ட போது, அதன் ஆரம்பக் காலப் பணிகள் மிகவும் சவாலானதாக இருந்தன. முறைசாரா தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களில் சிதறிக் கிடந்தனர். ஒரே பணியிடம் இல்லை. ஒரே முதலாளி இல்லை. நிரந்தர முகவரி இல்லை. பலருக்கு தொழிலாளர் என்ற அடையாளமே இல்லை. இத்தகைய சூழலில், தொழிலாளர்களை நேரடி யாகச் சந்தித்து, அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை உணர்ந்து, உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுப்பி னர்களாக இணைக்கும் பணி தொடங்கப்பட்டது. வீதிகள், சந்தை கள், பேருந்து நிலையங்கள், பணியி டங்கள், குடியிருப்புப் பகுதிகள், சிறு தொழிற்சாலைகள், வீட்டு வேலை நடைபெறும் பகுதிகள் என தொழிலாளர்கள் உள்ள இடமெல்லாம் சங்கத்தின் முன்னணி ஊழியர்கள் இரவு பகல் பாராமல் அலைந்து சங்கத்தின் உறுப்பினர்களாக சேர்த்தனர். சங்கத்தின் செயல்பாடு விரிவடைந்தது. "ஒன்றுபடுவோம் – உரிமை பெறுவோம்" என்ற முழக்கம் ஆயிரக்கணக்கான தொழிலாளர் களிடையே நம்பிக்கையை உரு வாக்கியது. அவர்களை சங்கத்தின் பக்கம் ஈர்த்தது.

சமூகப் பாதுகாப்புக்கான இடைவிடாத பணிகள்

உறுப்பினர் சேர்ப்போடு சங்கம் நின்றுவிடவில்லை. தமிழ்நாடு முறை சாரா தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினர்களைப் பதிவு செய்தல், உறுப்பினர் அட்டைகள் பெற்றுத்தரு தல், புதுப்பித்தல், பணப்பயன் மனுக்கள் தாக்கல் செய்தல், கல்வி உதவித்தொகை, திருமண உதவி, மகப்பேறு உதவி, இயற்கை மரணம் மற்றும் விபத்து நிவாரணம், முதியோர் ஓய்வூதியம் பெற்றுத்தருதல் என்பன உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டது. பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை தொழிலாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் சங்கம் தொடர்ந்து ஈடுபட்டது. சங்கத்தின் முயற்சியால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அரசின் நலத்திட்டப் பயன்களைப் பெற்றனர். குறிப்பாக, எல்ஐசி ஜனஸ்ரீ பீமா யோஜனா போன்ற குழுக் காப்பீட்டுத் திட்டங்களில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை இணைத்து, பல ஆயிரம் குடும்பங்களுக்கு கல்வி உதவி தொகை, இயற்கை மரணம், விபத்து, நிரந்தர ஊனமுற்ற நிலை போன்ற சூழல்களில் பல குடும்பங்கள் காப்பீட்டு நிதியைப் பெறும் வகையில் சங்கம் சிறப்பான பணியாற்றியது. இந்தச் சேவைகள் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான விடியலை ஏற்படுத்தியது.

குடும்ப பாதுகாப்பு நிதி

ஒரு தொழிலாளி உயிரிழந்தால், அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய நெருக்கடியைச் சந்திக்கும். இதை உணர்ந்த சங்கம், அரசு வழங்கும் நிவாரண உதவிகளுடன் மட்டுமல்லாமல், சங்கத்தின் மூலம் குடும்பப் பாதுகாப்பு நிதி (ஈமச்சடங்கு உதவி), அவசரகால உதவிகள் போன்ற மனிதநேய நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

25 ஆண்டுகளின் வளர்ச்சி

இத்தகையப் பணிகளால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முறைசாரா தொழிலாளர்களின் முக்கியமான தொழிற்சங்கங்களில் ஒன்றாக நமது சங்கம் வளர்ந்துள்ளது. இந்த நிலையை எட்டுவதற்கு சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாநிலைப் போராட்டம், தர்ணா, மறியல், ஆட்சியர் அலுவலக முற்றுகை, தொழிலாளர் துறை மற்றும் நலவாரிய அலுவலகங்கள் முன்பு பல நூதன வடிவிலான போராட்டங்கள், மனு கொடுத்தல், நீதிமன்ற வழக்கு, அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிடல் என பல்வேறு ஜனநாயகப் வழிமுறைகள் சங்கம் செயல்பட்டது. தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டு வருகிறது.

சிஐடியுவின் பார்வையும் எதிர்காலப் பணிகளும்

"25 ஆண்டுகள் கடந்து வந்தோம்; இனி வரும் ஆண்டுகள் முறைசாரா தொழிலாளர்களின் உரிமைகளை மேலும் வென்றெடுக்கும காலமாக அமையும். உழைக்கும் மக்களின் ஒற்றுமை வலுப்பெறும் வரை, சமூகப் பாதுகாப்பு அனைவருக்கும் கிடைக்கும் வரை, தொழிலாளர்களின் உரிமைக்கான இந்தப் பயணம் தொடரும். அதுவே நமது வெள்ளி விழாவின் உறுதிமொழியாகும்." தற்போதுள்ள நலவாரியங்களை மேம்படுத்துவது, அவற்றை தொழிலாளர்கள் எளிதில் அணுகும் மையங்களாக மாற்ற வேண்டும், குறிப்பாக, அனைவருக்கும் முழுமை யான சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரச் செலவுக்கேற்ப குறைந்தபட்ச ஊதியம், கிக் மற்றும் இணையதள தொழிலாளர்களுக்கு சட்டபூர்வ தொழிலாளர் அங்கீகாரம். அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் கட்டாய நலவாரியப் பதிவு. பொதுமக்கள் நல மருத்துவம், கல்வி மற்றும் ஓய்வூதியத்தை வலுப்படுத்துதல். தொழிற்சங்க உரிமைகளை முழுமையாகப் பாதுகாத்தல். தொழிலாளர் சட்டங்களில் உரிமைகள் பலவீனப்படுத்தப்படாத வகையில் திருத்தங்கள் செய்தல் போன்ற பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதிம் குறிப்பாக, முறைசாரா தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அறிவியல் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை கூடுதலாக சங்கம் வலியுறுத்தி இயக்கங்களை, நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

பேரிடர் கால வாழ்வாதார பாதுகாப்புத் திட்டங்கள்

வெப்ப அலை மற்றும் பருவநிலை மாறுபாடு மற்றும் மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறு தொழில்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சங்கம் நவீன காலத்திற்கேற்ப கோரிக்கைகளை உருவாக்கி செயலாற்றி வருகிறது.

வெள்ளி விழா நிகழ்வின் முன்னெடுப்பு

அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் முழுமையான சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியச் சட்டம் அனைத்து துறைகளிலும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். தேசிய அளவில் பொதுவான சமூகப் பாதுகாப்பு நிதியத்தை உருவாக்க வேண்டும். தெருவோர வியாபாரிகள் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு, சட்டவிரோத வெளியேற்றங்களை நிறுத்த வேண்டும். மாநில தொழிலாளர் நலவாரியங்கள் நிதி மற்றும் நிர்வாக ரீதியாக வலுப்படுத்த வேண்டும். அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், விபத்து நிவாரணம் மற்றும் குடும்பப் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத கொள்கைகள் திரும்பப் பெறப்பட்டு, தொழிலாளர் நலனை மையமாகக் கொண்ட கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.