ராஜராஜ சோழன் கால வெள்ளி நாணயம் கண்டெடுப்பு
27 Nov 2025, 3:11 pm
<p>கடலூர், நவ.27 – கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்புக் கள ஆய்வு மேற்கொண்ட கல்லூரி மாண வர்கள் வினோத்குமார், தேவா, சாமுவேல், டேவிட் ராஜ்குமார் ஆகியோரால், இராஜ ராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த வெள்ளி நாணயம் முதன்முறை யாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உலக மரபு வார விழாவை ஒட்டி, மாணவர்கள் தொல்லி யல் ஆய்வாளர் இம்மானுவேல் வழிகாட்டுதலின்படி தென்பெண்ணை ஆற்றில் ஆய்வு மேற்கொண்டபோது நாணயத்தைக் கண்டெடுத்தனர். சுத்தம் செய்து பார்த்ததில், அது கி.பி. 985 முதல் 1014 வரை ஆட்சி புரிந்த மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் காலத்திய வெள்ளி நாணயம் என உறுதிசெய்யப்பட்டது. நாணயத்தின் எடை சுமார் 4.35 கிராம் ஆகும். அதன் ஒரு பக்கத்தில் தேவநாகரி எழுத்தில் “ஸ்ரீராஜராஜ” என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவரை தென்பெண்ணை ஆற்று மேற்பரப்பு ஆய்வில் இராஜராஜ சோழனின் செப்பு நாணயங்கள் மட்டுமே 50க்கும் மேல் கிடைத்துள்ள நிலையில், வெள்ளி நாணயம் கிடைப்பது இதுவே முதல் முறை என ஆய்வாளர் இம்மானுவேல் தெரிவித்தார்.</p>
