மௌனிக்கப்படும் ஊடகங்களும் மரணிக்கும் ஜனநாயகமும்!
20 May 2026, 9:11 pm

மௌனிக்கப்படும் ஊடகங்களும் மரணிக்கும் ஜனநாயகமும்!

பிரதமர் மோடியிடம் நார்வே பத்திரிகையாளர் ஹெல் லிங் எழுப்பிய கேள்விகளும்,அதற்கு அவர் பதிலளிக்காமல் சென்றதும்; அதற்கு இந்தி யத் தரப்பின் மழுப்பல்களும், இணையவழித் தாக்கு தல்களும் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. அவை, இந்தியாவின் உலகளாவிய ஜனநாயக பிம்பத் திற்கும், உள்நாட்டில் நசுக்கப்படும் மாற்றுக்கருத் துக்களின் யதார்த்தத்திற்கும் இடையிலான முரண்பாட்டை அப்பட்டமாக உணர்த்துகின்றன.

சர்வதேச அரங்கில் இந்தியா தன்னை “ஜனநாயகத்தின் தாய்” என்று பறைசாற்றினா லும், சர்வதேச அமைப்புகள் இந்தியாவை “தேர் தல் சர்வாதிகார நாடாகவே” பார்க்கத் தொடங்கி யுள்ளன. ஹெல் லிங் போன்ற சர்வதேசப் பத்தி ரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேர்மையாகப் பதிலளிப்பது தேசத்துரோகமல்ல. ஜி20 மாநாடுகள், யோகா, தடுப்பூசி ஏற்றுமதி போன்றவற்றை முன்னிறுத்தி உள்நாட்டு மனித உரிமை மீறல்களையும் ஊடக ஒடுக்குமுறைக ளையும் மறைக்க முடியாது

வெளிப்படையான நிர்வாகத்தை ஒன்றிய அரசு மறுப்பதற்குப் பின்னால் பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்தல், கட்டமைக்கப்பட்ட பிம்பத்தைப் பாதுகாத்தல் ஆகிய காரணங்கள் உள்ளன. தரவுகளை மறைப்பதும், தகவல்களைத் தணிக்கை செய்வதும் அரசின் உத்தியாகிவிட்டது. வேலை யின்மை, பொருளாதாரச் சரிவு, மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கள் குறித்த தரவுகள் வெளிவந்தால், “எல்லாம் சிறப்பாக உள்ளது” என்ற மோடி அரசின் பிம்பம் உடைந்துவிடும். எனவே, கேள்விகளை எதிர்கொள்வதை விட, கேள்வி கேட்பவர்களை மௌனமாக்குவதே எளிதென அரசு கருதுகிறது.

உண்மையான ஊடகங்கள் முடக்கப் படும்போது, எஞ்சியிருப்பவை அரசாங்கத்தின் மடியில் தவழும் ஊடகங்களாக மாறிவிடு கின்றன. இங்கு உண்மையான செய்திகள் வெளி யாவதில்லை; மாறாக அரசின் பிரச்சாரங்கள் மட்டுமே செய்திகளாக மக்கள் மீது திணிக்கப்படு கின்றன. அரசாங்கத்தின் கொள்கைகளை விமர் சிப்பவர்கள் உடனடியாக “தேச விரோதிகள்”, “துரோகிகள்” என முத்திரை குத்தப்படுகின்றனர்.

கேள்விகளுக்கு அப்பாற்பட்டவராக ஒரு தலைவரைக் கட்டமைக்கும் பிம்ப ஆராதனை பாசிசத்தின் அறிகுறியாகும். உலகப் பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் இந்தியா 157-வது இடத்திற்குச் சரிந்திருப்பது வெறும் புள்ளி விவரமல்ல, அவமானகரமான உண்மை.

கேள்விகளை எதிர்கொள்ள அஞ்சும் தலைமை, ஒருபோதும் நாட்டை முன்னோக்கிச் செலுத்த முடியாது. இப்போதாவது இந்திய ஊடகங்களும், பொதுமக்களும் விழித்துக் கொண்டு தங்களின் ‘கேள்வி கேட்கும் உரி மையை’ மீட்டெடுக்க வேண்டும். இந்தியா நவீன சர்வாதிகாரப் பெருங்குழியில் வீழ்வதைத் தடுத்திட வேண்டும்.