“சைலென்ஸ்” நூல் வெளியிட்டு விழா
15 Feb 2026, 3:03 pm
<p><strong>“சைலென்ஸ்” நூல் வெளியிட்டு விழா</strong></p>
<p>கோவை, பிப்.15- எழுத்தாளர் அ.கரீம் எழுதிய இரண்டு நூல்கள் வெளியிட்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர், எழுத்தாளர் அ.கரீம் எழு திய “ரஹால்களை உடைக்கும் இபுலிசு கள்” என்கிற கவிதை தொகுப்பும், “சைலென்ஸ்” என்கிற சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா காந்திபுரம் சிருஷ்டி ஹாலில் நடைபெற் றது. அணங்கு, கோவை கிழக்கு தமு எகச கிளைகளின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, தமுஎகச மாவட்ட பொருளாளர் முனைவர் வெ.மைதிலி தலைமை ஏற்றார். தமுஎகச நிர்வாகி ஜின்னா வரவேற்றார். தமுஎகச நிர் வாகிகள் தி.மணி, மு.ஆனந்தன், தங்க முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, சைலென்ஸ் சிறுகதை தொகுப்பை தமுஎகச மாநில துணைத் தலைவர் கவிஞர் ஆதவன் தீட்சன்யா வும், ரஹால்களை உடைக்கும் இபுலிசு கள் கவிதை தொகுப்பை வழக்கறிஞர் எழுத்தாளர் இரா.முருகவேள் ஆகி யோர் வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர். கோவை வழக் கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். பலாகிருஷ்ணன் வாழ்த்தி உரையாற்றி னார். நூல் குறித்து, ஆதவன்தீட் சண்யா, பேராசிரியர் ராம்ராஜ், கவிஞர் த.ஜீவலட்சுமி ஆகியோர் உரையாற்றி னர். நூலாசிரியர் ஏற்புரையாற்றினார். முடிவில், முத்தையா மோகன் நன்றி கூறி னார்.</p>
