தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிக்கிம் சுரங்க வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

23 Jul 2026, 9:07 pm
சிக்கிம் சுரங்க வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு
<p><strong>சிக்கிம் சுரங்க வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு</strong></p><p>கேங்டாங் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநி லத்தின் நாம்ச்சி மாவட் டம், சமர்துங் பகுதியில் தேசிய நீர் மின்சக்தி கழகம் (என்எச்பிசி) சார் பில் தீஸ்டா நதி மீது 34.5 மீட்டர் உயர அணையுடன் கூடிய மின்னுற் பத்தி நிலையம் கட்டப்படுகிறது. இதன் கட்டுமானப் பணியை படேல் இன்ஜினீயரிங் நிறுவனம் மேற் கொண்டுள்ளது. இந்நிலையில், நீர்மின் திட்ட சுரங்கப் பாதைக்குள் திங்கட் கிழமை மதியம் 1 மணியளவில் மீத் தேன் வாயுக் கசிவால் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சுரங்கத் தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அதிகாரிகள் உட்பட 25 தொழிலா ளர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட னர். தேசிய, மாநில மீட்புப் படை, உள்ளூர் தீயணைப்பு மற்றும் காவல்துறை மீட்புப் பணியில் ஈடு பட்டு வருகின்றன. மேலும் மீட்புப் பணிக்கு உதவிட அண்டை மாநில மான மேற்கு வங்கத்தில் இருந்து சிறப்பு சுரங்க மீட்புக் குழு வந்துள் ளது. புதனன்று நிலவரப்படி இந்த சுரங்க விபத்தில் 20 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து வியாழனன்று மேலும் 2 பேரின் உடல் மீட்கப்பட்டது. இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. சுரங்கப் பாதைக்குள் சிக்கியுள்ள மீத முள்ள 3 தொழிலாளர்களை மீட்கும் பணியில் சிறப்பு மீட்புப் பணிக் குழு தீவிரமாக இறங்கியுள்ளது. நிவாரணம் உயிரிழந்த ஒவ்வொரு தொழி லாளியின் குடும்பத்தினருக்கும் தேசிய நீர்மின் கழகம் ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. அதே போல சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிதியுதவியும் அறிவித்துள் ளார். ஒன்றிய அரசு சார்பில் உயிரி ழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்த ஒவ் வொருவருக்கும் ரூ. 50,000 நிவார ணமாக அறிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.