குடிநீர் குழாய் கேட்டு மண்டல அலுவலகம் முற்றுகை
11 Mar 2026, 4:32 pm
<p><strong>குடிநீர் குழாய் கேட்டு மண்டல அலுவலகம் முற்றுகை</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 11- திருப்பூர் மாநகராட்சி 2 ஆவது மண்டலத்திற்கு உட் பட்ட நெருப்பெரிச்சல் பகுதி யில் குடிநீர் குழாய் அமைத்து தரக் கோரி அப்பகுதி மக்கள் புதனன்று நஞ்சப்பா நகரில் உள்ள மண்டல அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி 2 ஆவது மண்டலத்திற்குட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஜி.எம்.பாலன் நகர் பகுதியில் 200க்கும் மேற் பட்ட குடும்பங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலை யில் அப்பகுதியில் வீட்டு மனைகள் அங்கீ கரிக்கப்படாததால் மாநகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் மாநகராட்சி சார்பில் வீட்டு வரி, பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் அப்பகுதி மக்கள் மாநகராட்சியில் கட்டி வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. மேலும், தங்கள் பகுதிக்கு பொது குடிநீர் குழாய் மற்றும் வீடுகளுக்கு புதிய குடிநீர் குழாய் இணைப்பு வழங்க கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி புதனன்று மண்டல அலுவலகத்தை வரி கட்டிய ரசீதுடன் அப் பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலையில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபடுவேம் எனவும் தெரிவித்த னர். இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்ற னர்.</p>
