உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி முற்றுகை
11 Nov 2025, 3:41 pm

உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி முற்றுகை

ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கைது

சேலம், நவ.11- ஆந்திராவில் வழங்குவதைபோல, தமிழ் நாட்டிலும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல் துறையினர் கைது செய்தனர். மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் ஒரே வாழ்வாதாரமாக இருப்பது உதவித்தொகை மட்டுமே. இந்த உதவித்தொகையை நம்பியே பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ரூ.1,500 மற்றும் கடும் ஊனமுற்றோருக்கு மாற்றுத்திறனாளி கள் நலத்துறை மூலம் ரூ.2,000 உதவித்தொ கையாக வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகையானது தற்போதைய விலைவாசி அடிப் படையில் எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை. எனவே ஆந்திரா, தெலுங்கானா, தில்லி, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் உதவித்தொ கையை உயர்த்தி வழங்குவதைப்போல், மாற் றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மையைப் பொறுத்து ரூ.8,000, ரூ.10,000, ரூ.15,000/ வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் செவ்வா யன்று மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டத் தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக, சேலம் மாவட்டத் தில் ஆட்சியர் அலுவலகம், ஆத்தூர் கோட்டாட் சியர் அலுவலகம், மேட்டூர் கோட்டாட்சியர் அலு வலகம் என மூன்று மையங்களில் பெருந்திரள் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். அமலா ராணி தலைமை வகித்தார். இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் வி.கே.வெங்க டாஜலம், ஹரிகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப் பினர்கள் சாவித்திரி, செல்வம், கோவிந்தராஜ், ரவி, சக்திவேல், சீனிவாசன், அரிசியம்மாள், ஈஸ்வரி, கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டு கைதாகினர். ஆத்தூரில் மாவட்டச் செயலாளர் எம்.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் ஆ. கந்தன், துணைச்செயலாளர்கள் எஸ்.அழகு வேல், வி.சின்னதுரை, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் க.காளிதாஸ், பி.பாரதி, ராஜேந்திரன், எஸ்.சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேட்டூ ரில் மாவட்டப் பொருளாளர் ஜான் பெர்ணாண் டஸ் தலைமையில் நிர்வாகிகள் பி.பி.உமா காந்த், அ.பவுல்ராஜ், டி.நாகேந்திரன், சிஐடியு நிர்வாகிகள் சி.கருப்பண்ணன், இளங்கோ உட் பட பலர் கலந்து கொண்டு கைதாகினர். தருமபுரி தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் கே.ஜி.கரூரான் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து, பொருளாளர் மாதேசன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அரூ ரில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் கே.காந்தி தலைமை வகித்தார். மாவட் டத் தலைவர் தமிழ் செல்வி, ஒன்றியச் செயலா ளர் சி.வேலாயுதம் ஆகியோர் பேசினர். முடிவில், போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல் துறையினர் கைது செய்தனர் நாமக்கல் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நாகேஸ் வரி, பொருளாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஏ.ரங்கசாமி, சந்திரசேக ரன், செந்தில், மாதேஸ்வரன், வெங்கடாசலம், கனகவல்லி உட்பட திரளானோர் கலந்து கொண் டனர். முன்னதாக, முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில், சாலை மறியலில் ஈடு பட்ட மாற்றுத்திறனாளிகளை காவல் துறையினர் கைது செய்தனர். ஈரோடு ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து தலைமை வகித்தார். இதில் மாவட்ட துணைத் தலைவர் ராஜு, இணைச்செயலாளர் எஸ்.செந் தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோபி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத் தில் மாவட்டத் தலைவர் டி.சாவித்திரி தலை மையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தாளவாடியில் ஏ.பி.ராஜு தலைமையில் முற் றுகை போராட்டம் நடைபெற்றது.