வட மாநில வன்முறை வெறியாட்டங்கள் தென் மாநிலங்களிலும் அரங்கேற்றப்படுகின்றன தமுஎகச மாநாட்டில் சித்தார்த் வரதராஜன் எச்சரிக்கை
5 Dec 2025, 4:21 pm

வட மாநில வன்முறை வெறியாட்டங்கள் தென் மாநிலங்களிலும் அரங்கேற்றப்படுகின்றன தமுஎகச மாநாட்டில் சித்தார்த் வரதராஜன் எச்சரிக்கை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாட்டைத் துவக்கி வைத்து தி வயர் இணைய இதழின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் இணைய வழி ஆற்றிய உரையின் சாரம்:

தமுஎகச மாநாட்டின் முழக்கமான வெறுப் பின் கொற்றம் வீழ்க, அன்பே அறமென எழுக என் பதை அடிப்படையாகக் கொண்டுதான் என் உரையை நிகழ்த்த விரும்புகிறேன். முக்கியமாக இன்றைக்கு ஒருமுகப்படுத்தப்படக்கூடிய அரசியல் கலாச்சார சமூக நிகழ்வுகளை நம்மு டைய சகோதர சகோதரிகளை மாற்றுமதத்தவரை நாடு முழுதும் அடித்துத் துன்புறுத்திடும்போது அது ஏதோ ஒரு சாதாரண நிகழ்வு என்று நம் மனதில் கட்டமைக்கப்படக்கூடிய அரசியலை அவர்கள் மிகவும் தெளிவாக பதிவு செய்கிறார்கள்.

கும்பல் வன்முறை 10 ஆண்டுகளாக... மிகவும் முக்கியமாக ஸ்டான் சுவாமி போன்றோர் மீது தேசத்துரோக வழக்குகள் புனையப்படும்போது அவர்கள் தேசத்திற்கு துரோகம் செய்திருக்கிறார்கள் என்கிற பிரச்சாரத்தை மக்களும் நம்பக்கூடிய வகையில் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். அடுத்து அவர்கள் ஏவிடும் கும்பல் வன்முறை தொடர்பாகக் கூற விரும்புகிறேன். மாற்று மதத்தினர் மீது கும்பல் வன்முறை மேற்கொள்ளப்படும்போது பொது சமூகம் அதை ஏதோ சாதாரண ஒன்றாக எடுத்துக்கொள்ளும் மனநிலையை உருவாக்கி இருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கடந்த பத்தாண் டுகளாகவே கும்பல் வன்முறையை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய அம்சமாகும். உண்மையை எடுத்துக் கூறாத கோடி மீடியாக்கள் அடுத்து கார்ப்பரேட்டுகளின் கோடி மீடியாக்கள் மக்களிடையே உண்மையை எடுத்துக்கூறாமல் கார்ப்பரேட்டுகள் விரும்பும் விதத்தில் பொய்ப் பிரச்சா ரத்தை மேற்கொண்டுவருவதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அடுத்து இன்றைக்கு நாம் இருக்கக்கூடிய சூழல் என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் கொள்கையான இந்தியா இந்துத்துவா ராஜ்ஜியமாக மாற்றப்பட வேண்டும் என்பதேயாகும். அதற்கு ஆதரவாகவே மோடி, அமித் ஷா வகையறாக்கள் பிற மதத்தினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளை கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வட மாநிலங்களில் பிற மதத்தினருக்கு எதிராக மேற் கொள்ளப்படும் வன்முறை வெறியாட்டங்களும் மெல்ல மெல்ல தென்மாநிலங்களிலும் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். நாம் தமிழ்மொழி மீது அளவற்ற அன்பு வைத்தி ருக்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும். எனினும் அனைத்தையும் சமஸ்கிருதமயமாக்க வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு விதைப்பு 2024, 2025 தேர்தல் சமயங்களில் மோடி பிற மதத்தினருக்கு எதிராக விஷத்தைக் கக்கும் பேச்சு களைப் பேசியதைப் பார்த்தோம். இதற்கு எதிராக எவ்விதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் பார்க்க வேண்டும். கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை விதைத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம்.

மோடி பேசியதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் தொடர்ச்சியாக ஆர்எஸ்எஸ் இஸ்லாமியர்களுக்கு எதிராகச் சொல்லிக்கொண்டி ருக்கும் பொய் மூட்டைகளை இவரும் கூறியதுதான். அதாவது இஸ்லாமியர்கள் மாடுகள் கன்று ஈனுவது போல் பெற்றுத் தள்ளுகிறார்கள் என்றும், இந்துக்கள் அருகி அவர்கள் பெரும்பான்மையினராக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறிக்கொண்டி ருக்கிறார். சமூக ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரம் அடுத்து, சமூக ஊடகங்களும் பாஜக அரசாங்கத் திற்கு ஆதரவாக செயல்படுவதைக் கவனிக்க வேண்டும். வங்க தேசத்தில் கிளர்ச்சி நடைபெற்ற சமயத்தில் இந்து கோவில்கள் தாக்கப்படுவதாக துஷ்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதைப் பார்க்க வேண்டும். இதேபோல் இஸ்லாமியருக்கு ஆதரவாக மத மாற்ற நிகழ்வுகள் நடைபெறுவதாக கோடி மீடியாக்க ளும், சமூக ஊடகங்களும் பொய்ப் பிரச்சாரங்கள் கட்ட விழ்த்துவிட்டிருப்பதற்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டிசம்பர் 6 சனியன்று பாபர் மசூதிஇடிக்கப்பட்ட தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று ராஜஸ்தான் அரசு வெளியிட்ட விளம்பரத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்ததை அடுத்து அந்த விளம்பரம் விலக்கிக்கொள்ளப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கலைஞர்கள், நகைச்சுவை நடிகர்கள் கூட கைது அடுத்ததாக தில்லி தேர்தலின்போது அனுராக் தாகூர் என்ற அமைச்சர் இஸ்லாமியர்களை சுட்டுக் கொல்லுங்கள் என்று பொதுக்கூட்டத்திலேயே பேசிய போதிலும்கூட அவர் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோன்று பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் முஸ்லிம்களுக்கு எதி ராக விஷப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

முக்கியமாக அரசியல்ரீதியாக நிறுவனங்கள் எல்லாமே இந்துமதத்திற்கு ஆதரவாக கட்ட மைக்கப்பட்டிருக்கின்றன. கலைஞர்கள், நகைச்சுவை நடிகர்களைக்கூட தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளின்கீழ் கைது செய் யப்படுவதைப் பார்க்கிறோம். முளையிலேயே கிள்ளி எறிய... இவ்வாறான இவர்களின் பிரச்சாரம் தமிழகத்தில் எடுபடாதிருப்பதையும் அதற்கு இங்குள்ள அரசாங்க மும், சமூக அமைப்புகளுமே காரணம் என்பதையும் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன். எனினும் உங்களுக்கு எச்சரிக்கை செய்ய விரும்பு வது என்னவென்றால் லவ் ஜிகாத், மாட்டுக்கறி தின்ப வர்கள் கொலை செய்யப்படுவது போன்ற நிகழ்வுக ளுக்கு எதிராக உங்கள் மாநிலத்தில் மதவெறியர்கள் ஈடுபட்டால் அதனை முளையிலேயே நீங்கள் கிள்ளி எறிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக தமிழகம் பன்மைத்துவம் வாய்ந்த ஒரு மாநிலம். இதனை மென்மேலும் வளர்த்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி உங்கள் மாநாட்டை வாழ்த்துகிறேன். இவ்வாறு சித்தார்த் வரதராஜன் பேசினார். இவரது உரையை இரா.விஜயகுமார் தமிழாக்கம் செய்தார். (ந.நி.)