தீக்கதிர் முக்கிய செய்திகள்
29 May 2026, 7:52 pm

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா

அரசியலமைப்புச் சட்டம் அனைத்து வகுப்புவாத சக்திகளுக்கும் எதிரானது. எனது கடைசி மூச்சு இருக்கும் வரை, வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும், அரசியலமைப்புச் சட்டத்தைக் குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராகவும், சமூகத்தில் அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைப்பதைத் தடுப்பவர் களுக்கு எதிராகவும் நான் தொடர்ந்து போராடுவேன்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்

பாஜக மிக பிரம்மாண்டமான அளவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை சலவை செய்யும் (கட்சித் தாவல் மூலம் தூய்மையாக்கும்) நடவடிக்கையை நடத்தி வருகிறது. இந்த எம்பி/எம்எல்ஏ சலவை நடவடிக்கைக்கு எதிராக சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டால், பாஜகவின் பெருமளவிலான முதலமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சிறையில் இருப்பார்கள்.

பத்திரிகையாளர் ரோகினி சிங்

ஜனநாயகம் என்பது தேவைப்படும் போது மட்டும் வைத்துக் கொள்ளும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அல்ல. நினைவிருக்கட்டும், மௌனம் என்பதும் ஒரு அரசியல்செயல்தான். இன்றோ நாளையோ அதன் விலை ஒவ்வொரு வீட்டையும் வந்தடையும். ஜனநாயகம் தன்னை பாதுகாப்பவர்களை மட்டுமே பாதுகாக்கும்.

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி

நீட் தேர்வுக்கு ராணுவத்தை களமிறங்குகிறது ஒன்றிய அரசு. ராணுவம் அச்சு மையத்திலிருந்து நீட் தேர்வுத் தாள்களைப் பெற்று, குண்டு துளைக்காத வாகனங்கள் மூலம் விமானப்படை தளத்திற்கு எடுத்துச் செல்லும். விமானப்படை அனைத்து இடங்களுக்கும் பறந்துசென்று சேர்க்கும். கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்களையும் கூட பயன்படுத்தலாம். நகைச்சுவைகள் நன்றாக இருக்கின்றன.