முந்தய பக்கம்

முதல்வர் பதவி தலைமையின் முடிவு சித்தராமையா - டி.கே.சிவக்குமார் பேச்சு

29 Nov 2025, 4:58 pm
முதல்வர் பதவி தலைமையின் முடிவு சித்தராமையா - டி.கே.சிவக்குமார் பேச்சு
<p><strong>முதல்வர் பதவி தலைமையின் முடிவு சித்தராமையா - டி.கே.சிவக்குமார் பேச்சு</strong></p> <p>கர்நாடக மாநிலத்தில் முதல மைச்சர் சித்தராமையா தலை மையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று &nbsp;வருகிறது. துணை முதல மைச்சராக டி.கே.சிவக்குமார் உள்ளார். இரண்டரை ஆண்டுகள் தலைமை மாற்றம் என்ற பெயரில், முதலமைச்சர் மாற்றம் தொடர்பாக சித்தராமையா - டி.கே.சிவக்குமார் இடையே கடந்த 15 நாட்களுக்கு மேலாக மோதல் போக்கு &nbsp;நீடித்து வந்தது. இருவரும் தனித்தனி யாக தில்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே கர்நாடக காங்கிரஸ் பிரிவில் கடும் மோதல் நிலவி வருகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம் என பாஜக ஆதரவு கோடி மீடியா ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்தன. இந்நிலையில், சனியன்று காலை சித்தராமையா இல்லத்தில் நடைபெற்ற விருந்தில் டி.கே.சிவக்குமார் பங்கேற் றார். இருவரும் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை கூட்டாக சந்தித் தனர். அப்போது &nbsp;டி.கே.சிவக்குமார் கூறு கையில், &ldquo;கர்நாடக முதலமைச்சர் பதவி குறித்த பிரச்சனையை பொறுத்தவரை, கட்சி உயர்நிலைக் குழுதான் முடிவு செய்ய வேண்டும். உயர்நிலைக் குழு என்ன சொன்னாலும், நாங்கள் அதைப் பின்பற்றுவோம். நாங்கள் இருவரும் கட்சியின் விசுவாசமான வீரர்கள்&rdquo; என அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram