வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி சிட்குல் ஹாமில்டன் ஆலை தொழிலாளர்களின் அதிரடி வேலைநிறுத்தம்
15 Jun 2026, 9:49 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி சிட்குல் ஹாமில்டன் ஆலை தொழிலாளர்களின் அதிரடி வேலைநிறுத்தம்

“ரூ.11,000 அற்பக் கூலிக்கு 12 மணி நேரச் சுரண்டலா?”

வேலைநிறுத்தம் 61

ஹரித்துவார், ஜூன் 15 - “நாங்கள் இங்கு கலவரம் செய்ய வரவில்லை. எங்களுடைய உற்பத்தி பதிவுகளை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த ‘மில்டன்’ (Milton) வாட்டர் பாட்டில்களையும், டிபன் பாக்ஸ்களையும் தயாரிப்பதற்காக நாங்கள் இரவும் பகலும் 12 மணி நேரம் தொடர்ந்து கால்கடுக்க நின்று இயந்திரங்களை இயக்கு கிறோம். இந்த நிறுவனம் சந்தையில் விலையை உயர்த்தி கோடிக்கணக் கில் லாபம் சம்பாதிக்கிறது. ஆனால், எங்கள் கைகளில் கிடைப்பதோ வெறும் 11,000 ரூபாய் மட்டும்தான்! இந்த அற்பத் தொகையை வைத்துக் கொண்டு நாங்கள் ஹரித்துவாரில் அறை வாடகை கொடுப்பதா, மளிகை சாமான்கள் வாங்குவதா அல்லது எங்கள் குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துவதா? சமையல் எரிவாயு சிலிண்டர் விலையே ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிட்டது. எங்களின் கோரிக்கை மிகவும் தெளிவானது — எங்களின் அடிப்படை மாதச் சம்ப ளத்தை ₹20,000 ஆக உயர்த்த வேண்டும். ஆலை நிர்வாகமும், ஒப்பந்ததாரர்களும் எழுத்துப்பூர்வ மாக உத்தரவாதம் அளிக்கும் வரை இந்த வாயிலை விட்டு நகர மாட்டோம்” — உத்தர்கண்ட் மாநிலத்தின் மிகப்பெரிய தொழில் மண்டலமான சிட்குல் (SIDCUL) வளாகத்தில் உள்ள ஹாமில்டன் ஆலை வாயி லில் தொழிலாளி ஒருவர் ஆற்றிய ஆவேச உரை இதுவாகும்.

ஈரான் போர்ச் சூழலால் ஏற்பட்ட சமையல் எரிவாயு மற்றும் அத்தியா வசியப் பொருட்களின் கடுமையான விலைவாசி உயர்வு, தேசியத் தலை நகர் பிராந்திய (NCR) தொழில் மையங்களில் வெடித்த தொழிலா ளர் எழுச்சிகளின் தாக்கம் ஆகிய வற்றால், ஹரித்வார் சிட்குல் மற்றும் டேராடூன் செலாகுய் (SELAQUI) தொழிற்பேட்டைகளில் நிலவி வந்த ‘போலியான தொழிற்துறை அமைதி’ 2026-இன் தொடக்கத்தில் முற்றிலு மாக உடைத்தெறியப்பட்டுள்ளது.

ஹாமில்டன் ஆலையும் தந்திரமான ஒப்பந்தச் சுரண்டலும்

புகழ்பெற்ற ‘மில்டன்’ (Milton) தெர்மோஸ் பிளாஸ்க்குகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கும் ‘ஹாமில்டன் ஹவுஸ் வேர்ஸ்’ (Hamilton Housewares) நிறு வனத்தின் மிகப்பெரிய உற்பத்தி மையம் ஹரித்துவார் சிட்குல் வளாகத்தில் நான்கு அலகுகளுடன் இயங்கி வருகிறது. இங்கு எஃகு வார்ப்பு, இரட்டைச் சுவர் வெற்றிட இன்சுலேஷன், பிளாஸ்டிக் உட்செ லுத்துதல் போன்ற அதிநவீனத் தொழில்நுட்பப் பணிகள் நடைபெறு கின்றன.

இங்குள்ள சுமார் 1,200 தொழி லாளர்களில் வெறும் 10 முதல் 20 சதவீதத்தினர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள். மீதமுள்ள 80 முதல் 90 சதவீதத் தொழிலாளர்கள் ‘ஆர்.எஸ் மெயின் பவர்’ (RS Main Power) போன்ற கள்ளச் சந்தை ஒப்பந்த நிறுவனங்களால் மிகக் குறைந்த கூலிக்குக் கொண்டு வரப்பட்ட தற்காலிக ஒப்பந்தத் தொழி லாளர்கள் ஆவர். ஆலைக்குள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்கள் இல்லாத சூழலில், சிஐடியு மற்றும் ஏஐசிசிடிஇயு போன்ற மத்திய இடதுசாரி தொழிற்சங்கங்களின் வழிகாட்டுதலுடன் தற்காலிக ‘ஸ்ரமிக் சங்காதன்கள்’ (Shramik San gathans) மூலம் தொழிலாளர்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டனர்.

ஏமாற்றப்பட்ட உழைப்பும் சமூக ஊடகக் கொந்தளிப்பும்

உழைப்புச் சுரண்டல் மற்றும் உடல் துயரம் குறித்து எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் தொழிலாளி ஒரு வர் வெளியிட்ட பதிவு கார்ப்பரேட்டு களின் முகத்திரையைக் கிழித்தது:

“@Milton_India @Hamilton Housewares நான் சிட்குல் ஹரித்துவார் கிளையில் 7 நாட்கள் உழைத்தேன். ஒப்பந்த நிறுவனம் ‘ஆர்.எஸ் மெயின் பவர்’ எனது கூலியைத் தர மறுக்கிறது. பன்ச் கார்டு ஆதாரங்களைச் சமர்ப்பித்தும் மனிதவளத் துறை மௌனம் காக்கிறது. உழைப்பவர்களை இப்ப டித்தான் நடத்துவீர்களா? #Labour Rights #SIDCUL #Justice”

சட்டப்படி கூடுதல் வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தும், ஒற்றை ஊதியமே வழங்கப்பட்டது அல்லது அந்தப் பணமே கணக்குப் புத்தகங்களிலிருந்து நிர்வாகத்தால் திருடப்பட்டது. இதனைத் தட்டிக்கேட்ட தொழிலாளர்களை, “நாளை முதல் வேலைக்கு வராதே, வேறு ஆளைப் பார்த்துக் கொள்கிறோம்” என ஒப்பந்ததாரர்கள் மிரட்டியதே இப்போராட்டத்தின் பிரதானக் காரணமாகும்.

மே 10-15 : தொழிற்சாலைகளை உலுக்கிய ‘சக்கா ஜாம்’ எழுச்சி

மே மாதத் தொடக்கத்தில் ஷிப்ட் மாற்றங்களின் போது ஆலை வாயிலில் அமைதியான முறை யில் தொடங்கிய தர்ணா போராட்டங் களை நிர்வாகம் அலட்சியப்படுத்தி யது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், மே 10 முதல் 13 வரையிலான தேதிகளில் ஆலைக்குள் உற்பத்தி வேகத்தைக் குறைத்து போராட்டத்தை ஆலைக் குள்ளேயே விரிவுபடுத்தினர். உடனே கார்ப்பரேட் நிர்வாகம் காவல்துறை யை ஏவி, தொழிலாளர் பிரதிநிதிகள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்தது.

காவல்துறையின் இந்த அடக்கு முறை எதிர்ப்பு காட்டுத்தீயாக மாறி யது. மே 14 அன்று ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் அசெம்பிளி லைன்களைப் புறக்கணித்து வீதிக ளில் இறங்கினர். சிட்குல் நகரின் முக்கி யச் சந்திப்பான ‘ராஜா பிஸ்கட் சௌ ராஹா’ (Raja Biscuit Chauraha) பகுதியில் தொழிலாளர் கடல் திரண்டது. இந்த அலை அடுத்த நாளே ‘அகும்ஸ் டிரக்ஸ்’ (Akums Drugs) போன்ற மெகா பார்மா நிறு வனங்களுக்கும், மின்சார உற்பத்தி ஆலைகளுக்கும் பரவியது. டேரா டூன் செலாகுய் தொழிற்பேட்டை யிலும் போராட்டம் வெடித்த போது, காவல்துறையினர் காட்டுமிராண்டித் தனமான தடியடித் தாக்குதல் நடத்தினர்.

மே 17 பாசிச ஒடுக்குமுறையும் வர்க்க வெற்றியும்

தொழிலாளர் எழுச்சியைக் கண்டு நடுங்கிய பாசிச அரசு, மே 17 அன்று பாரதீய நகரிக் சுரக்சா சன்ஹிதாவின் 163-ஆவது பிரிவின் கீழ் (Section 163 BNSS - பழைய 144 தடை உத்தரவு) பொதுக் கூட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் தடை விதித்தது. ஆயுதமேந்திய போலீ சாரின் கொடி அணிவகுப்பு மூலம் தற்காலிகமாகப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டாலும், உற்பத்தியைத் தொடங்க வேண்டுமானால் தொழி லாளர்களுக்குப் பணிந்தாக வேண்டும் என்ற நிலைக்கு கார்ப்ப ரேட்டுகளும் மாவட்ட நிர்வாகமும் தள்ளப்பட்டன.

தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வர்க்க வெற்றிகள்:

• மாநில அரசின் திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்ப டையில், திறனற்ற தொழிலாளர் களுக்கு ₹13,800, பகுதி திறனுடை யோருக்கு ₹15,100, திறனுயுடை யோருக்கு ₹16,900 என அடிப்ப டைச் சம்பளம் உறுதி செய்யப்பட்டு, அதனுடன் வருகை போனஸ் (Attendance bonus) மற்றும் இதர படிகள் இணைக்கப்பட்டன.

• அதுவரை திருடப்பட்டு வந்த கூடு தல் வேலைக்கான (Overtime) இரட்டிப்பு ஊதியம் சட்டப்படி முறை யாக வழங்கப்படும் என ஒப்பந்த தாரர்கள் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டனர்.

• சட்டவிரோத 12 மணி நேரச் சுரண்டல் ஒழிக்கப்பட்டு, 8 மணி நேர ஷிப்ட் முறை கட்டாயமாக்கப் பட்டது. தொழிலாளர்கள் மீதான பொய் வழக்குகளைக் கைவிட மாவட்ட நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து, மே 22 அன்று ஹாமில்டன் ஆலை யில் உற்பத்தி வழக்கம் போல் தொடங்கியது. பாசிச ஒடுக்குமுறை களையும், கார்ப்பரேட் அராஜ கத்தையும் தங்களின் வர்க்க ஒரு மைப்பாட்டின் மூலம் தகர்த்தெறிந்த சிட்குல் தொழிலாளர்களின் இந்த வேலைநிறுத்தம், வடஇந்தியத் தொழிலாளர் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். தி லெப்ட் வியூஸ்