முந்தய பக்கம்

சிட்கோ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

6 Aug 2026, 12:33 am
சிட்கோ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

சிட்கோ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

ராணிப்பேட்டை,ஆக.5–வாலாஜா வட்டம், காரை கிராம சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ந. ப்ரியா ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமை (ஆக.4) நேரில் ஆய்வு செய்தார்.

தோல் பதனிடும் ஆலைகளின் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் இம்மை யத்தில், தலைகீழ் சவ்வூடுபரவல், பல்பயன் ஆவியாக்கி உள்ளிட்ட சுழற்சிகலன்களின் செயல்பாடு களை ஆட்சியர் பார்வை யிட்டார்.

மேலும், கழிவுநீர் மறுசுழற்சி முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாது காப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பெ. அனந்தநாராயணன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயகுமார், சிப்காட் திட்ட அலு வலர் கலைசெல்வி மற்றும் அலுவலர்கள் உடனி ருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram