இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் அமைப்பை மிரட்டியதா மோடி அரசு? எத்தனால் கலந்த பெட்ரோல் விவகாரம்
5 Aug 2026, 8:40 pm

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் அமைப்பை மிரட்டியதா மோடி அரசு? எத்தனால் கலந்த பெட்ரோல் விவகாரம்

புதுதில்லிஎத்தனால் கலந்த பெட்ரோல் (இ-20) தொடர்பாக இந்தியாவின் வாகன உற்பத்தியாளர் அமைப்பு (Society of Indian Automobile Manufacturers), கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.அதில்,”பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் ‘இ-20’ கொள்கையினால், எரிபொருளில் உள்ள அதிகப்

படியான குளோரைடு மற்றும் ஈரப்பதம் காரணமாக வாகனங்களின் இன்ஜின் பாகங்கள் பழுதடைகிறது. மேலும் அரிப்பு ஏற்படுகிறது” என கடிதத்தில் கூறியிருந்தது. அதாவது எத்தனால் கலந்த பெட்ரோல் வாகனங்களுக்கு நல்லதல்ல என்று கூறியது.எத்தனால் கலப்பால் வாகனங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று ஒன்றிய அமைச்சர்நிதின் கட்கரி தொடர்ந்து கூறிவந்த நிலையில், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் அமைப்பின் கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும்,”ஒன்றிய அமைச்சரின் கூற்றுக்கும் வாகனத்துறை அமைப்பின் கடிதத்திற்கும் முரண்பாடு உள்ளது; அமைச்சர் நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்” என்று எதிர்க்கட்சிகளும், ஆட்டோமொபைல் சார்ந்த ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் அமைப்பு, தான் எழுதிய முந்தைய கடிதத்தை இப்போது வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. அதில்,“எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளில்குளோரைடு மற்றும்அதிகப்படியான ஈரப்பதம் தொடர்பான எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் முன்பு குறிப்பிட்டதரவுகள் இன்னும் முழுமையாகச் சரிபார்க்கப்படவில்லை; தற்போதுஎண்ணெய் நிறுவனங்கள் செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் வாகனத் துறைக்குத் திருப்திகரமாகவே உள்ளன. பெட்ரோல் நிலையங்களில் தண்ணீர் கலக்காமல் இருக்க,எண்ணெய் நிறுவனங்கள் மிகத் தீவிரமாகச் சோதனைகளைச் செய்கின்றன. அதாவது, நாடு முழுவதும் உள்ள 87,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில், மழை பெய்த உடனே மற்றும் மற்ற நேரங்களிலும்சேர்த்து ஒரு நாளைக்கு 8 முதல் 12 முறை பெட்ரோலில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதைச் சோதித்துப் பார்க்கிறார்கள். எனவே எத்தனால் கலந்த பெட்ரோல் விவகாரத்தில் குளோரைடு பிரச்சனை இல்லை” என கூறி இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் அமைப்பு கூறியுள்ளது.

மிரட்டலா?

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் அமைப்பு வாகனங்கள் தொடர்பான விதிகள் மற்றும் வணிகக்கொள்கைகளை உருவாக்க ஒன்றிய அரசுக்கு உதவுகிறது. எத்தனால் கலந்த பெட்ரோல் விவகாரத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்த அந்த அமைப்பு, திடீரென தனது முடிவை வாபஸ் பெற்றதற்கு மோடி அரசின் மிரட்டல்தான் காரணமா? என சந்தேகம்கிளம்பியுள்ளது.