தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“சவுத் குரூப்” என்று பிரிவினைப்படுத்துவதா? : சமூகவலைத்தளங்களில் வறுபடும் சிபிஐ

27 Feb 2026, 5:32 pm
“சவுத் குரூப்” என்று பிரிவினைப்படுத்துவதா? : சமூகவலைத்தளங்களில் வறுபடும் சிபிஐ
<p><strong>&ldquo;சவுத் குரூப்&rdquo; என்று பிரிவினைப்படுத்துவதா? : சமூகவலைத்தளங்களில் வறுபடும் சிபிஐ</strong></p> <p>தில்லி மதுபான கொள்கை வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தென் இந்தியாவைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட நபர்களை &ldquo;சவுத் குரூப் (South Group)&rdquo; என்று &nbsp;குறிப்பிட்டதற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தில்லி ரோஸ் அவென்யு &nbsp;நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஜித்தேந்திர சிங் &nbsp;அளித்த தீர்ப்பில், &ldquo;குற்றம்சாட்டப்பட்டவர்களில் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்களை மட்டும் தனியாகப் பிரித்து &ldquo;சவுத் குரூப்&rdquo; (South Group) என்று ஒரு முத்திரையிட்டு அழைப்பது, ஒரு பாரபட்சமான பிம்பத்தை உருவாக்குகிறது. எந்தவொரு சட்டப்பூர்வமான ஆவணத்திலும் அல்லது ஆதாரத்திலும் இத்தகைய &ldquo;குழு&rdquo; இருந்ததற்கான சான்றுகள் இல்லாதபோது, சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் ஒரு கற்பனையான கதையை &nbsp;உருவாக்க இச்சொல்லைப் பயன்படுத்தியதை ஏற்க முடி யாது. இந்திய நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி யைச் சேர்ந்தவர்களை மட்டும் ஒரு குற்றச் செய லோடு இணைத்து &ldquo;குழு&rdquo; என்று அழைப்பது தேவையற்றது மற்றும் அது தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும்&rdquo; என நீதிபதி சிபிஐ-க்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். &nbsp;ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கின் விசாரணையின் போது வட இந்தியாவைச் சேர்ந்தவர்களை எதுவும் குறிப்பிடாமல், தென் இந்தியாவைச் சேர்ந்தவர்களை மட்டும் &ldquo;சவுத் குரூப்&rdquo; என்று குறிப்பிட்டதை தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சமூகவலைதளங்களில் கண்டனப் பதிவுகள் மூலம் சிபிஐ-யை வறுத்தெடுத்து வருகின்றனர்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.