ரயில்வேயில் நிரந்தரப் பணிகளை தனியார் மயமாக்குவதா? திருச்சியில் டி.ஆர்.இ.யூ கண்டன ஆர்ப்பாட்டம்
13 Mar 2026, 4:52 pm
<p><strong>ரயில்வேயில் நிரந்தரப் பணிகளை தனியார் மயமாக்குவதா? திருச்சியில் டி.ஆர்.இ.யூ கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, மார்ச் 13- டிஆர்இயு சார்பில் வியாழனன்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில், தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன், ரயில்வேயில் நிரந்தர பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏ.சி பெட்டிகளில் ஏ.சி மெக்கானிக் உதவியாக செல்லக்கூடிய அட்டெண்டர் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விடப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். திருச்சி கோட்டம் முழுவதும் உள்ள எலக்ட்ரிக்கல் பிரிவு டிரெயின் லைட்டிங் பிரிவில் 14க்கு மேற்பட்ட ஸ்டேஷனில் பணியாற்றும் ஊழியர்களை விழுப்புரம் மற்றும் திருச்சிக்கு இடமாற்றம் செய்து அந்த டிரெயின் லைட்டிங் வேலை முழுவதையும் காண்ட்ராக்ட் விடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தென்னக மண்டல பிரின்ஸ்புல் சீப் எலக்ட்ரிக்கல் என்ஜினியர் மற்றும் கோட்ட சீனியர் எலக்ட்ரிக்கல் என்ஜினியர் ஆகியோரின் தனியார்மய நடவடிக்கைகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, டி.ஆர்.இ.யு உதவி கோட்டத் தலைவர் பலராமன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி உதவி கோட்டத் தலைவர்கள் வேந்தன், அருண்ராஜ், உதவி கோட்டச் செயலாளர் ஜாய் சார்லஸ் டிக்கன்ஸ், கோட்டச் செயலாளர் கரிகாலன், துணை பொதுச் செயலாளர்கள் ராஜா, மாதவன் ஆகியோர் பேசினர். உதவி கோட்ட தலைவர் கணேசன் நன்றி கூறினார்.</p>
