தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மருத்துவத் துணைப் படிப்புகளுக்கு நீட் தேர்வைத் திணிப்பதா? மாணவர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

31 Jan 2026, 5:27 pm
மருத்துவத் துணைப் படிப்புகளுக்கு நீட் தேர்வைத் திணிப்பதா? மாணவர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>மருத்துவத் துணைப் படிப்புகளுக்கு நீட் தேர்வைத் திணிப்பதா? மாணவர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் </strong></p> <p>விழுப்புரம், ஜன.31- &nbsp;மருத்துவத் துணைப் படிப்புகளிலும் (Para Medical) நீட் தேர்வைத் திணிக்கும் ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து, விழுப்புரத்தில் சனிக்கிழமை (ஜன.31) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் நாகை மு.இளமாறன் இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு.ஜீவானந்தம், முற்போக்கு மாணவர் கழக வி.அகத்தியன், சமூக நீதி மாணவர் கழக மண்டலப் பொறுப்பாளர் ஒசாமா, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநிலச் செயற்குழு உறுப்பினர் பால்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டித்து உரையாற்றினர். மேலும், திராவிட மாணவர் கழக மாவட்டப் பொறுப்பாளர் இரா.சரண், மாவட்டக் காப்பாளர் கொ.பூங்கான், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் துரை.திருநாவுக்கரசு, பொதுக்குழு உறுப்பினர் பெ.சக்கரவர்த்தி, நகரத் தலைவர் இராஜேந்திரன், நகரச் செயலாளர் சதிஷ், மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் சே.வ. கோபன்னா, மாவட்டச் செயலாளர் அரங்க.பரணிதரன், திமுக மாணவரணி மாவட்டத் துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தி.லெனின்விஜய், மு.சரவணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.