உலகக்கோப்பையில் இருந்து விலக ஈரான் ஆசிய கால்பந்து சம்மேளனத்திற்கு தெரிவிக்க வேண்டுமா?
18 Mar 2026, 3:34 pm
<p><strong>உலகக்கோப்பையில் இருந்து விலக ஈரான் ஆசிய கால்பந்து சம்மேளனத்திற்கு தெரிவிக்க வேண்டுமா?</strong></p>
<p>அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல், உயர் தலைவர் காமேனி படுகொலை மற்றும் அமெரிக்காவில் பாதுகாப்புப் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் ஜூன் 11 அன்று தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை புறக்கணிப்பதாக கடந்த வாரம் ஈரான் அறிவித்திருந்தது. எனினும் தங்கள் நாட்டின் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்றுவது குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனத்துடன் (பிபா) ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், உலகக்கோப்பையில் இருந்து விலகியது தொடர்பாக தங்களுக்கு ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என ஆசிய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. உடனே சமூக வலைத்தளங்களில் ஆசிய கால்பந்து சம்மேளனத்திடம் ஒப்புதல் பெறாமல் உலகக்கோப்பையில் இருந்து விலகியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. கால்பந்து தொடரில் ஒரு நாடு விலகுவது குறித்த இறுதி முடிவை அந்த நாட்டின் தேசிய கால்பந்து கூட்டமைப்பு தான் எடுக்க வேண்டும். முதலில் பிபா அமைப்பிற்குத் தெரிவிக்க வேண்டும். ஈரான் ஒரு ஆசிய நாடாக இருப்பதால், அவர்கள் தங்கள் முடிவை ஆசிய கால்பந்து சம்மேளனத்திற்கும் ஒரு நகலாக மட்டுமே அனுப்ப வேண்டும் ; அவ்வளவு தான். முடிவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
