இ.முத்துக்குமாரை பொய்வழக்குகளில் தொடர்ந்து சிறையில் அடைப்பதா?
11 Apr 2026, 5:30 am

இ.முத்துக்குமாரை பொய்வழக்குகளில் தொடர்ந்து சிறையில் அடைப்பதா?

சென்னை, ஏப். 10 - சாம்சங் போராட்டத்தை நடத்திய இ. முத்துக்குமாரை பொய்வழக்குகளில் தொடர்ந்து சிறையில் அடைத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இ. முத்துக்குமாரை உடனடியாக விடு தலை செய்ய வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: எஸ்.எச். நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் எஸ்.எச். எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக தொழிலாளர் உரிமைகளை பறித்து அவர்களை வேலை நீக்கம் செய்திருக்கிறது. இந்த நடவடிக்கையை கைவிட வேண்டுமென மார்ச் 27 அன்று, சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான இ. முத்துக்குமார் தலைமையில் தொழிலாளர்கள் குடும்பத் தோடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர் களை காவல்துறை கைது செய்தது. இதில், இ. முத்துக்குமார் மற்றும் 5 தொழி லாளர்களை மட்டும் வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். பின்னர், நள்ளி ரவில் இ. முத்துக்குமாரை மட்டும் இதர தோழர்களிடமிருந்து பிரித்து வேறொரு இடத்தில் அடைத்துள்ளனர். பன்னாட்டு நிறுவனங்கள் தூண்டுதலால் அடக்குமுறை தேர்தல் நடைமுறை காரணமாக மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாத நிலையில், சிறையில் இருக்கும் இ.முத்துக்குமார் பிணையில் வெளியில் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே பன்னாட்டு நிறுவனங்களின் தூண்டு தலின் பேரில் பழைய வழக்குகள் இருப்ப தாகச் சொல்லி அவரை மீண்டும், மீண்டும் காவல்துறை கைது செய்து வருகிறது. அரசியலமைப்பு வழங்கி யுள்ள சட்ட மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய காவல்துறை காஞ்சிபுரம் மாவட்டத்தில் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு சேவகம் செய்யக் கூடிய தாக மாறி இருப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது.

முதலாளிகளின் ஏவல்துறையாக மாறிய காஞ்சிபுரம் காவல்துறை நவீன தாராளமய கால கட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக பொறுப்பு ஏற்ப வர்கள் பன்னாட்டு மற்றும் இந்திய பெரும் நிறுவனங்கள் விரும்புவதையும், சொல்வதையும் செய்யக் கூடியவர் களாக இருப்பது காவல்துறை மீது நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக பழி வாங்கும் உணர்ச்சியோடு காவல்துறை நடப்பது சட்டவிரோத செயல் மட்டுமல்ல, மனித உரிமை மீறலாகும். சாதாரண குற்றப்பிரிவுகளில் போடப்பட்டுள்ள வழக்குகளில் கூட, நீதித்துறை நடுவர் பிணையை மறுத்து வருவது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

கைது நடவடிக்கையை கைவிட்டு விடுதலை செய்ய வேண்டும் எனவே, வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இ. முத்துக்குமார் மற்றும் சிஐடியு மாவட்ட துணைச் செய லாளர் கார்த்திக், எஸ்.எச். எலக் ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பழிவாங்கும் நடவடிக்கையால் வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களான கணேஷ் குமார், நீதிவேல், மதன கோபால், மோகன் ஆகியோரை நிபந்த னையின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்ப்பந்தத் தின் காரணமாக இ. முத்துக்குமார் அவர்களை அடுத்தடுத்து கைது செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.