தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊழல் - மோசடிக் குற்றச்சாட்டுகளில் சிக்கியவரை மதுரை மாநகர காவல் ஆணையராக நியமிப்பதா?

3 Apr 2026, 5:05 pm
ஊழல் - மோசடிக் குற்றச்சாட்டுகளில் சிக்கியவரை  மதுரை மாநகர காவல் ஆணையராக நியமிப்பதா?

ஊழல் - மோசடிக் குற்றச்சாட்டுகளில் சிக்கியவரை  மதுரை மாநகர காவல் ஆணையராக நியமிப்பதா?

சென்னை, ஏப்.3 - பல்வேறு முறைகேடுகள், குற்றச்சாட்டுக் களில் சம்பந்தப்பட்டுள்ள அபிஷேக் தீட்சித்தை, மதுரை மாநகர காவல் ஆணையராக நியமித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்யவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாகவும், சட்ட விரோதமாகவும் “கந்தன் முருகன் வாக்கு” என்ற காணொளியை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளவர்களை கண்டறிந்து உரிய நட வடிக்கை எடுக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது.  இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.  சண்முகம் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ. ஆறுமுக நயினார், வெ. ராஜசேகரன் மற்றும் மூத்த தலைவர் ப. சுந்தர்ராசன் ஆகியோர், தமிழக  தலைமை தேர்தல் அதிகாரியைச் சந்தித்து, நேரில்  வலியுறுத்தியதுடன், எழுத்துப்பூர்வமான புகார் மனுவை அளித்து முறையிட்டனர். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் ஒரு சில  மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதி காரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அதன்படி,  மதுரையில் தற்போது பணியாற்றி வரும் மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் மாற்றப் பட்டு, அவருக்குப் பதிலாக அபிஷேக் தீட்சித் ஐபிஎஸ் (தமிழ்நாடு 2006) அதிகாரி பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். ஏற்கெனவே பல்வேறு முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் அபி ஷேக் தீட்சித் மீது சுமத்தப்பட்டு உள்ளதோடு, நிர்வாக  ரீதியாக நடவடிக்கைகளுக்கும் உள்ளாகியிருக் கிறார். லஞ்ச - முறைகேடு புகார்கள் நிரூபணமாகியுள்ளன அபிஷேக் தீட்சித், கிருஷ்ணகிரி காவல் கண்கா ணிப்பாளராகவும், பின்னர், உத்தரப் பிர தேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் மூத்த காவல்  கண்காணிப்பாளராகவும் பணியாற்றிய இரண்டு  பதவிக் காலங்களிலும் ஊழல் தடுப்பு வழக்கு கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொண் டிருக்கிறார். கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பா ளராக இருந்தபோது பெரும் முறைகேடுகள், குறிப்பாக, இடமாற்றங்கள் மற்றும் நியம னங்கள் தொடர்பாக சட்டவிரோதமாக லஞ்சம்  பெற்றார் எனும் குற்றச்சாட்டுகள் இவர் மீது  இருந்துள்ளன. ஆதாயம் பெறும் நோக்கத் தோடு இவர் சுமார் 87 இடமாற்றங்களைச் செய்ததற்கான ஆதாரம் நிரூபிக்கப்பட்டுள்ள தோடு இடமாற்றம் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில், தனக்குக் கீழ் பணிபுரியும் ஒரு  உதவி அதிகாரியை (எஸ்.ஐ. தரம்) இடைத்தரக ராகப் பயன்படுத்தினார் என்பதும் ஆவணங்களின்  மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. 2 கிலோ தங்கம், 15 கிலோ  வெள்ளி பறிமுதல் 2012-இல் மாவட்ட ஊழல் தடுப்பு ஆணை யம் (DVAC) அவர் மீது நடத்திய சோதனையில், கணிசமான சொத்துக்கள் (சுமார் 2 கிலோ தங்கம்,  15 கிலோ வெள்ளி மற்றும் நில ஆவணங்கள்) கண்டெடுக்கப்பட்டன. இத்தகைய திட்டமிட்ட நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட இவர், செப்டம்பர் 2020-இல் உ.பி. அரசால் இடைநீக்கம் செய்யப் பட்டார். மேலும், இடமாற்றங்கள் மற்றும் பதவி நியமனங்களில் ஊழல், மோசமான குற்றச்சாட்டுக்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது ஆகிய கார ணங்களுக்காகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாகவும் இவர் மீது ஊழல் தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், உயர் அதிகாரிகளால் வழங்கப் பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறி யது உள்ளிட்ட ஒழுங்கீனங்களுக்கான நடவடிக் கைகளுக்கு ஆளாகியுள்ளார். இத்தகைய குற்றச் சாட்டுகள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை களுக்கு உள்ளான பின்னர், சுமார் 18 மாதங் களுக்குப் பிறகு (மார்ச் 2022) இடைநீக்கம் ரத்து  செய்யப்பட்டு, தமிழ்நாடு பணிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். மதுரைக்கு நியமனம் செய்தது  ஏற்க முடியாதது! தனிப்பட்ட முறையில் அதிகாரத்தைத் தவ றாகப் பயன்படுத்தும் போக்கைக் கடைப்பிடிப்பது, இடமாற்றங்கள் / பதவி நியமனங்கள் மூலம் சட்ட விரோத ஆதாயங்களைத் தேடுவது மற்றும் சமூக விரோத சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து சட்ட விரோத நடவடிக்கைகள் பெருக வழிவகுப்பது போன்ற தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஆளான ஒருவரை மது ரைக்கு பணியிட மாற்றம் செய்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இத்தகைய ஒரு அதிகாரியை தேர்தல் பணியில் ஈடுபடுத்தினால், நியாயமான, வெளிப்படையான பணிகளை பெருமளவு பாதிக்கச் செய்யும் என்ப தோடு, மக்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் அவநம்பிக்கையை உருவாக்கும். ஜே. லோகநாதனை மீண்டும் நியமிக்க வேண்டும்! எனவே, அபிஷேக் தீட்சித் அவர்களின் பணி  மாற்றல் உத்தரவை உடனடியாக ரத்து செய்வ தோடு, ஏற்கெனவே பணியில் உள்ள சிறந்த முன்  அனுபவம் மற்றும் நிர்வாகத் திறன் கொண்ட முனைவர் ஜெ. லோகநாதன், அவர்களே பணி யில் நீட்டிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

“கந்தன் முருகன் வாக்கு” வீடியோவை உடனடியாக நீக்குக!

சாதி, மத, சமூக அல்லது மொழி ரீதியான பிரச்சனைகளை உருவாக்கவோ, ஏற்கெனவே  இருக்கும் பிரச்சனைகளை அதிகப்படுத்தவோ காரணமாகும் செயல்களில் கட்சிகள்  அல்லது வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது எனவும், சாதி, மத அடிப்படையில் வாக்குகள்  கோரக் கூடாது எனவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகள்  தெளிவாக கூறுகின்றன. இந்நிலையில் மதுரை, திருப்பரங்குன்றம் பிரச்சனையை மையப்படுத்தி ‘கந்தன் முருகன்  வாக்கு’ என்ற காணொளி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் காணொளி யில் பக்தர் ஒருவர் முருக கடவுளிடம் வேண்டிக் கொள்வது போன்றும், அதற்கு முருக கடவு ளின் பதிலாக பாஜக-வின் தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென்று கூறுவது போலவும் செயற்கை நுண்ணறிவு மூலம் தயார் செய்யப்பட்டு வெளிப்படையாக பரப்பப்பட்டு  வருகிறது. மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு வாக்கு சேகரிக்கும் இந்த ஏற்பாடு சட்டவிரோத மானது மட்டுமின்றி, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானதாகும். பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! எனவே, “கந்தன் முருகன் வாக்கு” என்று சமூக வலைதளங்களில் காணொளி வெளி யிட்டுள்ளவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், இந்த  காணொளி தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென்று தெரிவிப்பதால் பாஜக தலைமை  மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இந்த காணொளியை உடனடியாக சமூக வலைதளங்களி லிருந்து நீக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.