முந்தய பக்கம்

பொய்ப்புகாரில் தொழிற்கூடத்தை மூடுவதா?

15 Dec 2025, 5:05 pm
பொய்ப்புகாரில் தொழிற்கூடத்தை மூடுவதா?
<p><strong>பொய்ப்புகாரில் தொழிற்கூடத்தை மூடுவதா?</strong></p> <p>கோவை, டிச.15- இருகூர் பேரூராட்சி நிர்வாகம் தனி நபருக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத் தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். கோவை மாவட்டம், இருகூர் சிறப்பு &nbsp;நிலை பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர் &nbsp;பகுதியில் ஏராளமான குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின் றன. விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்கள் தயாரிப்புகளை ஜாப் &nbsp;ஆர்டர்களாக பெற்று அந்த நிறுவ னங்கள் செய்து தருகின்றனர். இந்நிலையில் அங்கு குறுந்தொழில் நிறுவனம் நடத்தி வரும் சேகர் என்ப வர் தனிப்பட்ட விரோதம் காரணமாக மணிகண்டன் என்பவருக்கு எதிராக &nbsp;பொய் வழக்கு புணைந்து இருகூர் &nbsp;பேரூராட்சிக்கும் தமிழக முதல்வ ருக்கும் கடந்த ஐந்து மாதங்களாக &nbsp;தொடர்ந்து புகார் அளித்து வருகின்றார். மேலும், அவரது தொடர் அழுத்தத்தின் காரணமாக இருகூர் பேரூராட்சி அதி காரிகள் சரிவர விசாரிக்காமல் மணி கண்டனின் தொழில் கூடத்திற்கு சீல் &nbsp;வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட தாக கூறப்படுகிறது. எனவே உரிய விசா ரணை நடத்தி தீர்வுகான வேண்டும் எனக் &nbsp;கோரி திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram