தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீப்பெட்டி தொழிலுக்குத் தேவையான மெழுகு தட்டுப்பாடு 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

10 Mar 2026, 3:51 pm
தீப்பெட்டி தொழிலுக்குத் தேவையான மெழுகு தட்டுப்பாடு 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
<p><strong>தீப்பெட்டி தொழிலுக்குத் தேவையான மெழுகு தட்டுப்பாடு 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்</strong></p> <p>தூத்துக்குடி, மார்ச் 10 - &nbsp;தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகு மலை, எட்டயபுரம், கடலையூர், தென் காசி மாவட்டம் திருவேங்கடம், குருவிகுளம், விருதுநகர் மாவட் டம் சாத்தூர், சிவகாசி, தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, திருத்தங்கல், திருவில்லிபுத்தூர், வேலூர் மாவட்டம் குடியாத்தம், தர்மபுரி மாவட்டம் காவிரிப்பட்டினம் ஆகிய இடங்களில் 400 இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், 90 சத வீதம் பெண் தொழிலாளர்கள் பணி யாற்றுகின்றனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் தீப்பெட்டி தொழி லுக்கு மிகவும் முக்கிய மூலப் பொருளான மெழுகு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி விலை யும் உயர்ந்துள்ளது. &nbsp;தீப்பெட்டித் தொழிலுக்கு தேவையான மெழுகு ஈரானில் இருந்துதான் இறக்குமதி செய்யப் பட்டு வருகிறது. போர் காரணமாக கப்பல் போக்குவரத்து முடங்கி யுள்ளதால் மெழுகு வருவது நிறுத்தப்பட்டுள்ளது. கையிருப் பில் உள்ள மெழுகுகளை உள்நாட்டு &nbsp;வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். போருக்கு முன்பு ஒரு கிலோ மெழுகு 80 ரூபாய் இருந்த நிலையில், தற்போது 130 &nbsp;ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, தீப்பெட்டி பண்டல்களுக்கு தேவைப்படும் பிபி கவர், செலோ டேப் தயாரிக்க &nbsp;பயன்படும் வெர்ஜின் பெட்ரோ லிய பொருளும் ஈரானில் இருந்து தான் வருகிறது. அதுவும் தடைபட் டுள்ளதால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. போருக்கு முன்பு ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்ப னையானது, தற்போது ரூ.180-க்கு &nbsp;விற்பனையாகிறது. போர் இன்னும் &nbsp;தொடர்ந்தால் மெழுகு கிடைக்கா மல் போகும் நிலை ஏற்படுவது மட்டு மின்றி, தீப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம் உருவாகும். இதுகுறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர் ராஜு கூறுகை யில், &ldquo;போர் காரணமாக ஈரானில் &nbsp;இருந்து வந்து கொண்டிருந்த மெழுகு முற்றிலுமாக தடைபட்டு உள்ளது. உள்ளூர் வியாபாரிகள் அதன் விலையையும் உயர்த்தி யுள்ளனர். மெழுகு தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளதால் தொழில் பாதிக்கப்ப டும் சூழ்நிலை உள்ளது. விலை யேற்றம் காரணமாக ஒரு பண்ட லுக்கு ரூ.10 முதல் ரூ. 20 வரை &nbsp;உற்பத்திச் செலவும் அதிகரித் துள்ளது. மேலும் வெளிநாடு களுக்கு தீப்பெட்டி பண்டல் ஏற்று மதி செய்வதும் முடங்கும் சூழ்நிலை &nbsp;ஏற்பட்டுள்ளதால், ஒன்றிய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்&rdquo; என்றார். ஏற்கெனவே ஒருமுறை பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர் களால் தீப்பெட்டி தொழில் அழிந்து கொண்டிருக்கும் நிலையில், போர் காரணமாக மெழுகும் தடை படும் சூழ்நிலை உள்ளதால், தீப்பெட்டி தொழில் முற்றிலுமாக முடங்கும் சூழ்நிலைக்கு தள்ளப் படுவது மட்டுமின்றி, 5 லட்சம் தொழி லாளர்கள் வேலை இழக்கும் அபா யம் ஏற்பட்டுள்ளது. - விக்னேஷ்</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.