தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராஜகோபால் பேருந்து நிலையத்திலிருந்து நிரந்தரமாக பேருந்து இயக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்

26 Feb 2026, 5:09 pm
ராஜகோபால் பேருந்து நிலையத்திலிருந்து நிரந்தரமாக பேருந்து இயக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்
<p><strong>ராஜகோபால் பேருந்து நிலையத்திலிருந்து நிரந்தரமாக பேருந்து இயக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்</strong></p> <p>தருமபுரி, பிப்.26- தருமபுரி ராஜகோபால் (பழைய) பேருந்து நிலையத்திலிருந்து நிரந்தர மாக பேருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி வணிகர்கள் சார் பில் ஒருநாள் கடையடைப்பு நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி நகரின் மையப்பகுதியில் பி.ஆர்.ராஜகோபால் பேருந்து நிலை யம் 1980 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு &nbsp;வருகிறது. தமிழகத்திலுள்ள அனை த்து ஊர்களுக்கும் பேருந்து இயக்கப்பட்டன. இந்நிலையில் மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசல் அதிகமானாதால் நகராட்சி நிர் வாகம் பென்னாகரம் சாலையில், ஏ. ரெட்டிஅள்ளி கிராமத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கு ஏது வாக ரூ.39.14 கோடியில் நகராட்சிக்கு தனியார் வழங்கிய நிலத்தில், அரசு - &nbsp;தனியார் பங்களிப்புடன் புதிய பேருந்து &nbsp;நிலையம் அமைக்கப்பட்டது. இத னால் பழைய பேருந்து நிலையம் வெறிச் சோடியது. பேருந்து நிலைய வியாபாரி கள் வருமானமின்றி தவித்தனர். எனவே, பழைய பேருந்து நிலையத்தி லிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளை இயக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி னர். அதனையேற்று திருப்பத்தூர், அரூர் பாப்பிரெட்டிபட்டி, சேலம் திரு வண்ணாமலை ஆகிய ஊர்களின் பேருந்துகளை பழைய பேருந்து நிலை யத்திற்குள் நிறுத்தி இயக்கப்படும் என &nbsp;மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், உள்ளூர் அளவில் &nbsp;இயங்கும் பேருந்துகளை நிரந்தரமாக &nbsp;தருமபுரி ராஜகோபால் பேருந்து நிலை யத்திலிருந்தே இயக்க வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று தருமபுரி நக ரம் முழுவதும் வணிகர்கள் ஒருநாள் &nbsp;கடையடைப்பு நடத்தி, பேருந்து நிலைய &nbsp;நுழைவுவாயில் தர்ணாவில் ஈடுபட்ட னர். இதன்பின் கோரிக்கைகளை முழுங் கியவாறே பேரணியாக நான்கு ரோடு &nbsp;செல்ல முயன்ற வணிகர்களை தடுத்து, &nbsp;தருமபுரி நகர காவல் துறையினர் கைது &nbsp;செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.