தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் உடைந்து விழுந்தது கடையின் மேற்கூரை

26 Dec 2025, 4:32 pm
விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் உடைந்து விழுந்தது கடையின் மேற்கூரை
<p><strong>விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் உடைந்து விழுந்தது கடையின் மேற்கூரை</strong></p> <p>விருதுநகர், டிச.,26- விருதுநகர் புதிய பேரு ந்து நிலையத்தின் முதல் தளத்தில் நகராட்சியால் வாடகைக்கு விடப்பட்ட கடையின் மேற்கூரை உடைந்து விழுந்தது. விருதுநகர் புதிய பேருந்து &nbsp; நிலையமானது, கடந்த 1992 ஆம் ஆண்டு மே 3 இல் திறக்கப்பட்டது. இப்பேருந்து நிலையம் துவக்கப்பட்ட காலத்தில் புற நகர் பேருந்துகள் அனை த்தும் இங்கிருந்தும், நகரப் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்பட்டு இரு பேருந்து நிலையங்களும் செயல்பட்டு வந்தன. பின்பு பல்வேறு அரசியல் கார ணங்களால் நீண்ட கால மாக செயல்படாமல் இருந்தது. இந்நிலையில், அப்போ தைய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் கடந்த 2024 ஆகஸ்ட் 21 முதல் பேருந்துகள் வந்து செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது, புதிய பேருந்து நிலையத்தில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டது. இதைய டுத்து, சுற்றுச் சுவர் கட்டும் பணி தற்போது நடைபெற்று &nbsp;வருகிறது. மேலும் கழிப்ப றை கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், புதிய பேருந்து நிலையத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள &nbsp;மேல் தளத்தில் &nbsp;கடைகள் ஏற்கனவே வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதில் முதற் கடை ஏற்கனவே, சேத மான நிலையில் இருந்தது. சமீபத்தில் பெய்த மழை யில் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்து விட்டது. நல்வாய்ப்பாக அப்போது யாரும் கடைக்குள் இல்லை. இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. எனவே, புதிய பேருந்து நிலையத்தில் சேதமான கடைகளை புதுப்பித்துத்தர வேண்டும். &nbsp;அதுவரை வாடகை வசூலிப்பதை நக ராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டுமெனவும் கடை களின் குத்தகைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.