கர்நாடக வனத்துறை 3 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் தமிழர்களுக்கான முதல் குரலாக முதலமைச்சரின் குரல் ஒலிக்கும்! சட்டமன்றத்தில் அமைச்சர் உறுதி
18 Aug 2026, 9:00 pm

கர்நாடக வனத்துறை 3 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் தமிழர்களுக்கான முதல் குரலாக முதலமைச்சரின் குரல் ஒலிக்கும்!

சட்டமன்றத்தில் அமைச்சர் உறுதி

சென்னை, ஆக. 18 -கர்நாடகத்தைச் சேர்ந்த 3 தமிழர்கள், அம்மாநில வனத்துறை யினரால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாயன்று சிறப்புக் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப் பட்டது. இதில், பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசினர்.

‘போலி என்கவுண்ட்டர்’

திமுக உறுப்பினர் மனோஜ் பாண்டியன் பேசுகையில், மாடுகளைத் தேடிச்சென்ற தமிழர்கள் சுடப்பட்டதை ‘மனிதஉரிமை மீறல்’ மற்றும் ‘போலி என்கவுண்ட்டர்’ எனக் குற்றம் சாட்டினார். நீதி விசாரணை நடத்துவதற்கு கர்நாடக அரசுக்குத் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் கோரினார்.

சிபிஐ விசாரணை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “மான் வேட்டையாடியதால் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக கர்நாடக அரசு கூறியிருப்பதை ஏற்க முடியாதுஎன்றும், இதில் பெரிய சதி இருப்பதாகப் போராடும் கிராம மக்கள் கிராமத்தினர் கூறியிருப்பதால், சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்என்றார்.

கூடுதல் இழப்பீடு

காங்கிரஸ் சட்டமன்றக்குழுத் தலைவர் தாரகை கத்பட் பேசுகையில், “மனித உயிருக்கு விலையில்லாமல் போய்விட்டதாகவும், கர்நாடக அரசு அளித்த நிவாரணம் போதாது என்பதால் கூடுதல் இழப்பீடும், சிபிஐ விசாரணையும் வேண்டும்” என்றார்.

ரூ. 1 கோடி வழங்குக!

சிபிஐ சட்டமன்றக்குழுத் தலைவர் டி. ராமச்சந்திரன் பேசுகையில், அராஜகப் போக்கைக் கண்டித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்எனவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார். விவாதங்களுக்குப் பதி லளித்து, சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேசுகையில், சம்பவத்தன்று வனத்துறையினரின் வேட்டை தடுப்பு நடவடிக்கையின்போது மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு இடைக்கால நிவாரணத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாகவும்,மாஜிஸ்திரேட் விசாரணை நடப்பதாகவும் கூறினார்.

மேலும், “இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர், உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்துத் தண்டனை பெற்றுத்தரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய உதவி வழங்கவும்கர்நாடக அரசை வலியுறுத்தியுள் ளார்” என்றார். அப்போது, ‘முதலமைச்சரின் குரலே தமிழர்களின் குரல்’ எனஅமைச்சர் பேசியபோது அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இறந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழ்நாடு அரசுசார்பில் தலா ரூ. 10 லட்சம் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார்தெரிவித்தார்.

குற்றத்தை மறைக்க கர்நாடகம் முயற்சி; நீதி விசாரணைக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டி. லதா பேசுகையில், “கர்நாடக மாநில சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சார்ந்த தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட விவசாயிகளான அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகியோர், காணாமல் போன மாடுகளை தேடி - தாங்கள் வழக்கமாக மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள் சென்றபோது, கர்நாடக மாநில வனத்துறையினர் சுட்டு கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தங்கள் குற்றத்தை மறைக்க அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தை கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும். உயிரிழந்த தமிழர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இது குறித்து உரிய முறையில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.