தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

8 Jun 2026, 10:03 pm
விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து 2026 இங்கிலாந்து அணி முகாம் அருகே துப்பாக்கிச் சூடு அமெரிக்காவில் பதற்றமான சூழல்

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற உள்ளது. 48 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரில் 104 போட்டிகளில் மொத்தம் 1,248 வீரர்கள் களம் காண உள்ளனர். இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடங்க 3 நாட்களே உள்ள சூழலில், அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமான கான்சாஸ் சிட்டியில் உள்ள இங்கிலாந்து உலகக்கோப்பை முகாம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து அணி இன்னும் கான்சாஸ் சிட்டிக்கு வரவில்லை. புதன்கிழமையன்று புளோரிடாவின் ஆர்லாண்டோவில் கோஸ்டாரிகாவுக்கு எதிரான உலகக்கோப்பைக்கு முந்தைய நட்புரீதியான ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு, அங்கு தங்கியுள்ளனர். இதனால் இங்கிலாந்து அணி வீரர்கள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க இங்கிலாந்து கால்பந்து சங்கம் மறுத்துவிட்டது. எனினும் இச்சம்பவத்தால் அமெரிக்காவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

முல்லன்பூர் டெஸ்ட் இந்திய அணி 300 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி

ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி களைக் கொண்ட தொடரில் பங்கேற்க ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் தொடக்க நிகழ்வாக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி சனியன்று முல்லன்பூரில் (நியூ சண்டிகர்) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கி யது. கேப்டன் கில் (126), கே.எல்.ராகுல் (100) ஆகியோர் சதத்தின் உதவியால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 127 ஓவர்களில் 8 விக்., இழப்பிற்கு 564 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. தொட ர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியின் அறிமுக வீரர் மானவ் சுதர் (3 விக்.,) பந்துவீச்சை தாக்கு ப்பிடிக்க முடியாமல் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்., இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர்ந்து திங்களன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. மதிய உணவு நேரத்துக்கு முன்பாகவே எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் ஆப்கா னிஸ்தான் இழந்து, பாலோ - ஆன் பெற்றது. ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 58.4 ஓவர்களில் 152 ரன் களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 60 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் அறிமுக வீரர் (சுழற்பந்துவீச்சு) 22 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரசித் கிருஷ்ணா 3, தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட் வீழ்த்தினர். இரண்டாவது இன்னிங்சிலும் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களின் (வாஷிங்டன் சுந்தர் - 4, குல்தீப் - 3, மானவ் சுதர் -1) சூழலை தாக்குப்பிடிக்க முடியாமல் கடுமையாக திணறியது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் செதியுல்லா (42 ரன் கள்) மட்டுமே ஓரளவு தாக்குப் பிடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்ட மிழந்தனர். இறுதியில் ஆப்கானிஸ் தான் அணி 35.5 ஓவர்களில் 112 ரன் களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 300 ரன்கள் வித்தி யாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது. அடுத்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 13 முதல் தொடங்குகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.