சோளிங்கரில் வாலிபர் சங்கம் ரத்ததான முகாம்
28 Sept 2026, 1:05 am

சோளிங்கரில் வாலிபர் சங்கம் ரத்ததான முகாம்

ராணிப்பேட்டை, செப். 27 -தோழர் பகத்சிங்கின் 119-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் ரத்ததானமுகாம் நடைபெற்றது.

வாலிபர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ. பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற இம்முகாமை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஜி. பார்த்திபன் தொடங்கிவைத்தார். சூ. சரத்குமார் மற்றும் ச. அரிபாபு ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ஏ.பி.எம்.சீனிவாசன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆ. கலைவாணன், நிர்வாகிகள் தென்னரசு, ரஜினி, நகர மன்ற உறுப்பினர் கோபால், அரசு மருத்துவமனை ரத்தவங்கி பொறுப்பாளர் மருத்துவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.