நெல் கொள்முதல் தாமதத்தால் வேதனையில் சோழவந்தான் பகுதி விவசாயிகள் முளைத்து அழுகிய நெல்மணிகள்
11 May 2026, 11:43 pm

நெல் கொள்முதல் தாமதத்தால் வேதனையில் சோழவந்தான் பகுதி விவசாயிகள் முளைத்து அழுகிய நெல்மணிகள்

நெல் கொள்முதல் தாமதத்தால் வேதனையில் சோழவந்தான் பகுதி விவசாயிகள் முளைத்து அழுகிய நெல்மணிகள்பகுதிகளில் ஒன்றிய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நெல் கள், பல நாட்களாக கொள்முதல் செய்யப் படாததால் மழையில் நனைந்து முளைத்து அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இத னால் விவசாயிகள் கடும் வேதனையில் உள் ளனர்.

இந்த பகுதிகளில் சுமார் 600 ஏக்க ருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

அறுவடை செய் யப்பட்ட நெல்கள் ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் செயல்படும் கொள்முதல் நிலை யங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

ஆனால், பல நாட்களாக நெல் கொள்முதல் நடைபெறாததால் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக் கின்றன.

கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், திறந்த வெளியில் இருந்த நெல் மூட்டைகளில் மழைநீர் புகுந்து நெல்மணிகள் முளைத்தும் அழுகியும் சேத மடைந்துள்ளன.

பல இடங்களில் நெல்மணி கள் மீண்டும் முளைத்துக் காணப்படுவது விவசாயிகளை அதிர்ச்சியடையச் செய்துள் ளது. ஏ

க்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயி ரம் வரை செலவழித்து சாகுபடி செய்த விவசாயிகள், தற்போது தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

மழைநீரில் நெல் நனையாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடி வைத்தாலும், கனமழை காரணமாக அது பலனளிக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும், அவர்கள் தொலைபேசி அழைப்புகளை ஏற்க வில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையும் இதுவரை விவ சாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இரவு பகலாக கொள்முதல் நிலையங்க ளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளதாகவும், தங்களின் வாழ்வாதாரம் கண்முன்னே வீணாகி வருவதாகவும் விவ சாயிகள் கண்ணீருடன் கூறினர்.

எனவே, கீழ்நாச்சிகுளம், மேல்நாச்சி குளம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உட னடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் லுக்கான தொகையை உடனடியாக விவசாயி களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற் றும் அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத் துள்ளனர்.

மேலும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மதுரை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையான வாடிப்பட்டி பகுதி யில் நெல் மூட்டைகளை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தப் போவதாகவும் விவசாயி கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.