கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
9 Mar 2026, 4:24 pm

வெள்ளிங்கிரி மலையில் ஒருவர் உயிரிழப்பு

கோவை, மார்ச் 9- வெள்ளிங்கிரி மலையேற்றத்திற்கு வந்த பொற் கொல்லர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். கோவை மாவட்டம், கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (48). இவர் பொற்கொல்லராக பணி யாற்றி வந்தார். இந்நிலையில் கோவை பூண்டி வெள்ளிங் கிரி மலையற்றத்திற்கு செல்ல தனது நண்பர் மாரியப் பன் என்பவருடன் ஞாயிறன்று இரவு 11.30 மணி அள வில் வெள்ளிங்கிரி மலைக்கு வந்தார். பிறகு முதல் மலை யில் ஏறிச்சென்ற போது திடீரென ஹரிதாஸுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வலிப்பு வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்த அவரது நண்பர் சுமை தூக்கும் தொழிலாளிகள் உதவியுடன் அவரை கீழே தூக்கி வந்த னர். அப்போது அங்கிருந்த மருத்துவர் ஹரிதாஸை பரி சோதனை செய்தபோது அவர் வரும் வழியிலேயே உயிரி ழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த ஆலாந் துறை போலீசார் ஹரிதாஸின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். நடப்பு ஆண்டில் இதுவரை வெள்ளிங்கிரி மலையேற்றத்திற்கு வந்த மூன்று பேர் உயிரிழந்தது குறிப் பிடத்தக்கது.

இளைஞர்களை கடத்திச் சென்று பணம் பறித்த கும்பல் கைது

சேலம், மார்ச் 9- சங்ககிரி அருகே வடமாநிலத்தை சேர்ந்த இளை ஞர்கள் 3 பேரை கடத்திச் சென்று ரூ.90 ஆயிரம் பணம் பறித்துச் சென்ற கும்பலை போலீசார் கைதனர். மேற்கு வங்காளம் கலிகன்ஜி நைடா பகுதியை சேர்ந்தவர் சகாருதீன் (27). இவர் அபுதாபியில் கடந்த ஐந்து வருடங்களாக வேலை செய்து விட்டு மேற்கு வங்காளத்திற்கு வந்து விட்டார். தற்போது வேலை ஏதும் இல்லாததால் அதே ஊரைச் சேர்ந்த ஜஸ்முதீன் (20) மற்றும் நஜ்மல் ஆகியோருடன் சேர்ந்து வேலைத்தேடி கேரளம் மாநிலம், திருச்சூருக்கு செல்வதற்காக திரு வனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி பாலக்கோடு அருகே வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் வேலை வேண்டுமா? இந்த எண்-க்கு தொடர்பு கொள்ளும் மாறு கூறி விசிட்டிங் கார்டு ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் மூவரும் விசிட்டிங் கார்டில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு வேலை குறித்து விசாரித்துள்ளனர். அப்போது திட்டமிட்ட கும்பல் ஒன்று ஞாயிறன்று மூவரை யும் சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு வரச் சொல்லி, வெள்ளை நிற காரில் அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு ரூமிற்கு கூட்டிச் சென்றனர். பின்னர் கதவை உள்புற மாக தாளிட்டுக்கொண்டு பணம் கேட்டு உருட்டு கட்டை யால் மூவரையும் தாக்கி உள்ளனர். அப்போது ஜஸ் முதீன், நஜ்மல் ஆகியோர் தங்கள் குடும்பத்தாரிடம் பேசி பணத்தை பெற்று கடத்தல் கும்பலிடம் கொடுத்துள் ளனர். அதனை பெற்றுக் கொண்ட கும்பல் அவர்கள் இரு வரையும் விடுவித்து விட்டனர். சகாருதீன் வீட்டிலி ருந்து பணத்தை அனுப்ப முடியாததால் கடத்தல் கும்பல் சகாருதீனை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். உடனே சகாருதீன் வீட்டார் ரூபாய் 40 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளனர். அதனை யடுத்து கடத்தல் கும்பல் கோவை சேலம் தேசிய நெடுஞ் சாலையில் பள்ளக்காபாளையம் என்ற இடத்தில் சகாரு தீனை இறக்கி விட்டு சென்று விட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் சகாருதீனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குமராபாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சகாருதீன் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், ஆய்வாளர் வேலுதேவன் (பொறுப்பு), எஸ்ஐ அருண்குமார் ஆகியோர் வழக்கு பதிந்து திங்களன்று கடத்தல் கும்பல்காரர்களான திருச் செங்கோட்டைச் சேர்ந்த சோமசுந்தரம்(35), கைலாசம் பாளையம் பகுதியை சேர்ந்த கவுசிக்குமார்(29), ஈரோட்டைச் சேர்ந்த இளையராஜா(35) ஆகிய மூன்று பேரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் ரூ.90 ஆயிரம் மற்றும் மூன்று செல்போன்களை பறிமுதல் செய்து தலை மறைவான அஜித், கோகுல்ராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர். சங்ககிரி அருகே வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் 3 பேரை கடத்திச் சென்று ரூபாய் 90 ஆயிரம் பணம் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகைக்காக கொலை - இருவர் கைது

கோவை, மார்ச் 9- கோவையில் ஆரிய வைத்திய பார்மஸி நிறுவனர் மகளை 2 சவரன் நகைக்காக கொலை செய்த வழக்கில் நேபாளை சேர்ந்த இருவரை தனிப்படை போலீசார் பெங்க ளூரில் கைது செய்தனர். கோவை, நஞ்சுண்டாபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ஆரிய வைத்திய பார்மஸி நிறுவனரின் மகளான கஸ்தூரி (82) என்பவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடந்த வெள்ளியன்று சடலமாக மீட்கப்பட் டார். மேலும் அவரது கழுத்தில் அணிந்தி ருந்த 2 சவரன் நகையும் மாயமானது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கஸ் தூரி வீட்டில் பணியாற்றி வந்த நேபாள நாட்டை சேர்ந்த சுர்ஜா ரோக்கியும் காணாமல் போய்விட்டார். முதல் கட்ட விசாரணையில் நள்ளிரவில் அவரது வீட்டிற்கு மூன்று அடை யாளம் தெரியாத நபர்கள் வந்ததும் தெரிய வந்தது. அவர்களை தேடி சென்னை, பெங்க ளூர், மகாராஷ்ரா மாநிலங்களுக்கு தனிப் படை போலீசார் விரைந்தனர். இந்நிலையில் கஸ்தூரி கொலை வழக்கு தொடர்பாக நேபாள நாட்டை சேர்ந்த ராகேஷ் சாடு (26), திலீப் (26) ஆகிய இருவரை பெங்களூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்த னர். இதில் திலீப்பிடம் இருந்து திருடப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வியாழக்கிழமை இரவு 12 மணியளவில் 3 பேர் கஸ்தூரியின் வீட்டிற்கு வந்ததும், 2 சவ ரன் செயின் மற்றும் கிடைத்த பணத்தை திருடி தப்பியதும் தெரியவந்தது. பிடிபட்ட இரண்டு பேரையும் போலீசார் கோவை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கஸ்தூரியின் வீட்டில் பணியாற்றி வந்த சுர்ஜா ரோக்கி உள் ளிட்ட மூவரை போலீசார் தேடி வருகின்ற னர்.

தொழிலாளியிடம் 60 கிலோ வெள்ளி மோசடி தற்கொலைக்கு முயற்சித்ததால் அதிர்ச்சி

சேலம், மார்ச் 9- தொழிலாளியிடம் 60 கிலோ வெள்ளியை மோசடி செய்த வெள்ளி வியாபாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடும் பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம், நெத்திமேடு பகுதியை சேர்ந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளி சிவகுமார் (40), மனைவி வெண்ணிலா (38) மற்றும் அவர்களது இரண்டு மகள்களுடன் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில், பாது காப்பு பணியில் இருந்த போலீசார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பெட்ரோலை பறிமுதல் செய்து சமாதானம் பேசி னர். இதைத் தொடர்ந்து சிவாகுமாரிடம் போலீசார் விசா ரணை மேற்கொண்டதில், மணியனூர் பகுதியில் வெள்ளி வியாபாரியிடம் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தேன். நான் பணிபுரிந்த போது சிறிது சிறிதாக சேமித்து என்னிடம் 60 கிலோ வெள்ளி இருந்தது. இதையறிந்த வெள்ளி வியா பாரி வெள்ளியை தன்னிடம் கொடுத்தால் நல்ல விலைக்கு விற் பனை செய்து தருவதாக கூறி என்னிடமிருந்து 60 கிலோ வெள்ளியை வாங்கிக் கொண்டார். கடந்த மூன்று ஆண்டு களுக்கு முன் 60 கிலோ வெள்ளியை கொடுத்தேன். ஆனால் வெள்ளி வியாபாரியான சக்திவேல் இதுவரை வெள்ளியை யும் திருப்பித் தரவில்லை, பணமும் தரவில்லை இது குறித்து கேட்டதற்கு தகாத வார்த்தையில் பேசி மோசடி செய்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே வேதனையில் தற்கொலைக்கு முயற்சித்த தாக தெரிவித்துள்ளார்.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்:80.99/105அடி நீர்வரத்து:52கனஅடி நீர்திறப்பு:2500கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:04.08/160 அடி நீர்வரத்து:14.72கனஅடி நீர்திறப்பு:80.00கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:61.25/72 அடி நீர்வரத்து:115கனஅடி நீர்திறப்பு:925கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:69.50/120அடி நீர்வரத்து:252கனஅடி நீர்திறப்பு:706கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:43.55/60அடி நீர்வரத்து:691கனஅடி நீர்திறப்பு:1112கனஅடி