உரிய விலை கிடைக்காததால் அதிர்ச்சி 300 டன் உருளை கிழங்குகள் தேக்கம்: விவசாயிகள் போராட்டம்
11 Dec 2025, 3:52 pm
<p><strong>உரிய விலை கிடைக்காததால் அதிர்ச்சி 300 டன் உருளை கிழங்குகள் தேக்கம்: விவசாயிகள் போராட்டம்</strong></p>
<p>மேட்டுப்பாளையம், டிச. 11- மேட்டுப்பாளையம் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உருளைகிழங்குக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்து இரண்டு நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 300 டன் உருளைக் கிழங்குகள் தேக்கமடைந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் கடந்த 1935 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் உருளைக்கிழங்குகளைச் சந்தைப்படுத்த, இச்சங்கத்தில் குன் னூர், ஊட்டி, கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 618 விவ சாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர் விற்பனைக்காக லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் உருளைக்கிழங்கு கள், இங்குள்ள ஊழியர்களால் தரம்பிரிக்கப்பட்டு, 45 கிலோ கொண்ட மூட்டைகளாகக் கட்டப்பட்டு, அதன் தரத்திற்கு ஏற்ப வியாபாரிகளால் ஏல முறையில் வாங்கிச் செல்லப்படுகின்றன. இந்நிலையில், செவ்வாயன்று நடந்த ஏலத்தின் போது, நீலகிரி மாவட்ட விவசாயிகள் மொத்தமாக 34 லோடுகள் (சுமார் 300 டன்) உருளைக் கிழங்குகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். அப்போது நடந்த ஏலத்தில், உருளைக்கிழங்கிற்கு அதிகபட்சமாக ரூ.1440-ம், குறைந்த பட்சமாக ரூ.1060-ம் விலை நிர்ண யிக்கப்பட்டது. இந்த விலை தங்களுக்கு உரிய லாபத்தைத் தரவில்லை எனக் கூறிய விவசாயிகள், சங்க அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் எனக் கோரிக் கை விடுத்தனர். இதனால், ஏலம் பாதி யிலேயே நிறுத்தப்பட்டது. விவசாயி களின் தொடர் எதிர்ப்புக் காரணமாக, இரண்டாவது நாளாக புதனன்று நீலகிரி மாவட்ட விவசாயிகள் எவரும் உரு ளைக்கிழங்குகளை விற்பனைக்காகக் கொண்டு வரவில்லை. மேலும், தங்களுக்கு உரிய விலை கிடைக்கும் வரை ஏலம் நடத்தக் கூடாது எனக் கூறி, விவசாயிகள் அலுவலக வளாகத்தில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.இதையடுத்து, நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் துணைப் பதி வாளர் முத்துக்குமார், சார்-பதிவாள ரும் மேலாளருமான நிஸார் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 300 டன் தேக்கம் அப்போது, விவசாயிகள் தரப்பில், விதை உருளைக்கிழங்குகளை ரூ.1600 வரை விலை கொடுத்துப் பெற்று, நடவு கூலி, பராமரிப்புச் செலவு, உரம், பறிக்கும் கூலி எனச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. எனவே, விற்பனைக்காகக் கொண்டு வரப்படும் நீலகிரி மாவட்ட விவசாயிகளின் உரு ளைக்கிழங்குகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.2000 நிர்ண யம் செய்ய வேண்டும். அத்துடன், கடந்த டிசம்பர் 9ஆம் தேதி விற்பனை க்காகக் கொண்டு வரப்பட்ட 34 லோடு உருளைக்கிழங்கினை முதலில் ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையேற்றுக் கொண்ட அதி காரிகள், விவசாயிகளின் கோரிக்கை களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகளின் இந்த இரண்டு நாள் போராட்டம் காரண மாக சுமார் 300 டன் அளவிற்கு உரு ளைக்கிழங்குகள் தேக்கமடைந்த நிலை யில், வியாழனன்று மீண்டும் உருளை க்கிழங்கு ஏலம் துவங்கியது.</p>
<p> </p>
