“கொள்ளையர்கள் அனைவரும் அமித் ஷாவின் மடியில் அமர்ந்திருக்கிறார்கள்”
yesterday
<p><strong>“கொள்ளையர்கள் அனைவரும் அமித் ஷாவின் மடியில் அமர்ந்திருக்கிறார்கள்” </strong></p><p>கொள்ளையர்கள் அனை வரும் அமித் ஷாவின் மடியில் அமர்ந்தி ருக்கிறார்கள் என சிவசேனா (உத்தவ்) கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகா ரப்பூர்வ ஏடான சாம்னா வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அயோத்தி ராமர் கோவில் மேம்பாடு என்ற பெயரில் உண்மையில் அங்கு என்ன நடக்கிறது? கோவிலுக்கு வந்த நன்கொடைகள், தங்கம், வெள்ளி மற்றும் நகைகள் அனை த்தும் பகிரங்கமாகக் கொள்ளையடிக் கப்பட்டுள்ளன. அன்று கஜினி முகமது சோமநாதர் கோவிலைக் கொள்ளைய டித்ததைப் போல, இன்று பாஜக ராமர் கோவிலைக் கொள்ளையடித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் பல முக்கியக் கோவில்கள் கொள்ளைய டிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்ளை யர்கள் அனைவரும் பாஜக கட்சிக்குள் ளேயே, அமித் ஷாவின் மடியில் தான் அமர்ந்திருக்கிறார்கள். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் எவ்விதப் பங்களிப்பும் செய்யாத இந்த மனிதர் கள், தாக்கரேவை நோக்கி விரல் நீட்டுகி றார்கள். இது அமித் ஷாவின் மோசம டைந்து வரும் மனநல ஆரோக்கியத்தை யே காட்டுகிறது” என சிவசேனா (உத்தவ்) கட்சி கூறியுள்ளது.</p>
