தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் ஆணையத்தின் ‘தேசத்துரோகச்’ செயல்களை விரைவில் அம்பலப்படுத்துவோம்  சிவசேனா (உத்தவ்) எச்சரிக்கை

24 Nov 2025, 2:46 pm
தேர்தல் ஆணையத்தின் ‘தேசத்துரோகச்’ செயல்களை விரைவில் அம்பலப்படுத்துவோம்  சிவசேனா (உத்தவ்) எச்சரிக்கை
<p><strong>தேர்தல் ஆணையத்தின் &lsquo;தேசத்துரோகச்&rsquo; செயல்களை விரைவில் அம்பலப்படுத்துவோம் &nbsp;சிவசேனா (உத்தவ்) எச்சரிக்கை</strong></p> <p>தேர்தல் ஆணையத்தின் தேசத்துரோ கச் செயல்களை விரைவில் அம்பலப்படுத்துவோம் என &ldquo;இந்தியா&rdquo; &nbsp;கூட்டணியில் அங்கம் வகிக் &nbsp;கும் சிவசேனா (உத்தவ்) கட்சி எச்சரிக்கை &nbsp;விடுத்துள்ளது. &nbsp;மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாந கராட்சி தேர்தலுக்கான வரைவு வாக்கா ளர் பட்டியல் வெளியிடும் தேதி தொடர் பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆதித்ய தாக்கரே தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறுகையில்,&rdquo;சிவசேனா (உத்தவ்) கட்சியின் நிர்வாகி ஒருவர் மாநகராட்சியின் மத்திய தேர்தல் பிரிவில் &nbsp;முறையாகக் கட்டணம் செலுத்திப் பெற்ற &nbsp;மும்பை வரைவு வாக்காளர் பட்டியலில், வெளியீட்டுத் தேதி நவம்பர் 14, 2025 &nbsp;என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முதலில் நவம்பர் 7 அன்று வெளியிடுவதாக இருந்த &nbsp;பட்டியல், பிறகு நவம்பர் 14 என்றும், இறு தியில் நவம்பர் 20 அன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் &nbsp;நவம்பர் 14ஆம் தேதியே தயாராக இருந்த &nbsp;வரைவுப் பட்டியல் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது? மற்றவர்களுக்கு இந்தப் பட்டியலைக் கொடுப்பதில் ஏன் இவ்வளவு கால தாமதம் ஏற்பட்டது? வாக் &nbsp;காளர் பட்டியலில் ஏதாவது குறுக்கீடு செய்ய இழுத்தடிக்கப்பட்டதா? யாரு டைய உத்தரவுக்காகக் காத்துக் கொண்டி ருந்தது தேர்தல் ஆணையம்? இந்த வாக்காளர் பட்டியல் ஏன் அச்சு இயந்தி ரத்தால் படிக்கக்கூடிய வடிவத்தில் இல்லை? தேர்தல் ஆணையத்தின் தேசத் &nbsp;துரோகம் அம்பலமாகிவிடும் என்பத னாலா? தேர்தல் ஆணையத்தின் செயல் கள் குறித்து விரைவில் ஒரு பெரிய ரகசி யத்தை அமல்படுத்துவோம்&rdquo; என அவர் &nbsp;எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.