சிம்லா தூய்மைப் பணியாளர்களின் தீரமிக்க வர்க்கப் போராட்டமும் மாபெரும் வெற்றியும் “7 நாட்கள் நீடித்த வேலைநிறுத்தம்; மண்டியிட்ட மாநகராட்சி”
1 Jun 2026, 10:04 pm

சிம்லா தூய்மைப் பணியாளர்களின் தீரமிக்க வர்க்கப் போராட்டமும் மாபெரும் வெற்றியும் “7 நாட்கள் நீடித்த வேலைநிறுத்தம்; மண்டியிட்ட மாநகராட்சி”

வேலைநிறுத்தம் 46

சிம்லா, ஜுன் 1- இமாச்சலப் பிரதேச நீர்மின் திட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களைத் தொட ர்ந்து, அம்மாநிலத்தின் தலைநக ரான சிம்லாவில் மிக அத்தியாவசி யப் பொதுச்சேவையில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் நடத்திய தீரமிக்க வேலைநிறுத்தப் போராட்டம் முழுமையான வெற்றியைப் பெற்று ள்ளது. சிம்லா சுற்றுச்சூழல், பாரம்பரி யம் மற்றும் அழகூட்டல் முகமை யின் (SEHB) கீழ் பணிபுரியும் 900-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணி யாளர்கள், மாநகராட்சி நிர்வா கத்தின் தொழிலாளர் விரோதப் போக்குக்கு எதிராகச் சிஐடியு இணைவு பெற்ற எஸ்இஹெச்பி (SEHB) சங்கத்தின் பதாகையின் கீழ் நடத்திய 7 நாட்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம், நிர்வாகத்தை உடன்பாட்டுக்கு வரக் கட்டாயப்படுத்தி யுள்ளது. சிம்லா மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயருடன் எட்டப்பட்ட எழுத்துப்பூர்வ ஒப்ப ந்தத்தின்படி தொழிலாளர்களின் முதன்மைக் கோரிக்கைகள் அனை த்தும் வென்றெடுக்கப்பட்டுள்ளன.

போராட்டம் வெடித்ததற்கான பின்னணியும் உழைப்புச் சுரண்டலும்

கடந்த ஏப்ரல் 4, 2026 அன்று நடைபெற்ற எஸ்இஹெச்பி சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு க்கூட்டத்தில், தொழிலாளர்களுக்குப் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த 10 சதவீத ஆண்டு ஊதிய உயர்வை ரத்து செய்வதாகவும், 15 நாட்கள் சிறப்பு விடுப்புச் சலுகையைப் பறிப்பதாகவும் மாந கராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக அறிவித்தது. அதற்குப் பதிலாக வெறும் 3 சதவீத அகவிலைப்படியை மட்டும் வழங்குவதாகக் கூறி, தொழிலாளர்களின் மாதாந்திர ஊதியத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்த நிர்வாகம் துணிந்தது. சிம்லா நகரின் வீதிகள், சுற்று லாத் தலங்கள், சந்தைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைத் தங்களின் உழைப்பால் தூய்மையாக வைத்திருக்கும் பணியாளர்களின் இந்த வாழ்வாதாரப் பறிப்பு, தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சாக்கடைகளைச் சுத்தம் செய்தல், குப்பைகளை அள்ளுதல் போன்ற மிக அபாயகரமான பணிச்சூழலில் உழைக்கும் தங்களுக்கு, மிகக் குறைந்த ஊதியத்தை வழங்கி, முறையான சமூகப் பாதுகாப்பை யும் மறுத்து வந்த நிர்வாகத்தின் இந்தத் துரோகத்தை எதிர்த்துத் தொழிலாளர்கள் போர்க்கொடி தூக்கினர்.

பெண் தொழிலாளர்களின் குமுறல்களும் தீவிரமடைந்த போராட்டமும்

வேலைநிறுத்தத்திற்கு முன்பாக காளிபாரி அரங்கில் (Kalibari Hall) திரண்ட குப்பை சேகரிப்பாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஒட்டுமொத்தமாகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்தனர். மே 15, 2026 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொட ங்கும் எனத் தொழிற்சங்கம் அதி காரப்பூர்வமாக அறிவித்தது. இப்போராட்டத்தில் பங்கேற்ற பெண் தொழிலாளி ஒருவர் உள்ளூர் ஊடகங்களிடம் தனது ஆதங்கத்தைக் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார்.

“நாங்கள் ஆடம்பர வாழ்க்கை யைக் கேட்கவில்லை, எங்கள் பிள்ளைகளும் குடும்பமும் கண்ணி யமாக வாழ்வதற்கான கூலியை மட்டுமே கேட்கிறோம். பால், சமை யல் எரிவாயு உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வேளையில், எங்கள் ஊதியத்தைப் பறிப்பது எந்த வகையில் நியாயம்? பெண் தொழிலாளர்களுக்கு முறை யான மகப்பேறு விடுப்போ, அவசர மருத்துவக் கால உதவியோ கூட வழங்காமல், எந்நேரமும் வேலை யை விட்டு நீக்குவோம் என மிரட்டு வது உழைப்பு நெருக்குதல் இல்லை யா?” என்று அவர் குமுறினார்

அண்மைக்காலமாகத் தூய்மை பணியாளர்களின் வேலைப்பளு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு தொழிலாளி கவனிக்க வேண்டிய வீடுகளின் எண்ணிக்கை 80 இலிருந்து 300 ஆக உயர்த்தப் பட்ட போதிலும், அதற்கேற்ற ஊதிய மோ, கூடுதல் நேர ஊதியமோ வழங்கப்படவில்லை.

முத்தரப்பு உடன்பாடும் வென்றெடுக்கப்பட்ட உரிமைகளும்

7 நாட்கள் தொடர்ச்சியாக நீடித்த இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் ஒட்டுமொத்த சிம்லா மாநகரத்தின் துப்புரவுப் பணிகளும், பொது சுகாதாரமும் கடு மையாகப் பாதிக்கப்பட்டு, நிர்வாகத் திற்குப் பெரும் சவாலாக மாறியது. இதன் விளைவாக, மாநகராட்சி மேயர், துணை மேயர், சிஐடியு மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் முன்னிலையில் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடி வில் எட்டப்பட்ட முக்கிய உடன்பாடு கள் பின்வருமாறு:

• தொழிலாளர்களின் பறிக்கப்பட்ட 10 சதவீத ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் 15 நாட்கள் சிறப்பு விடுப்புச் சலுகை ஆகியவை உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

• தொழிலாளர்களின் நீண்டகாலக் கோரிக்கையான 4-9-14 ஆகிய வருடப் பணிவழிக் கால ஊதியச் சலுகைகள் முறையாக அமல் படுத்தப்படும்.

• இப்போராட்டத்தின் போது தன்னிச்சையாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட 41 தூய்மைப் பணி யாளர்கள் எவ்வித நிபந்தனை யுமின்றி மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

மேலும், தொழிற்சங்கம் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச மாத ஊதியம் ₹26,000 வழங்கு தல், கிராஜுவிட்டி அமலாக்கம், சம வேலைக்குச் சம ஊதியம், பிஎப் நிலுவைத் தொகையைச் செலுத்து தல் உள்ளிட்ட 32 அம்சக் கோரி க்கை சாசனம் குறித்தும் தொடர்ந்து விவாதிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது

கூட்டுப் போராட்டத்தின் வெற்றியும் வர்க்க விழிப்புணர்வும்

இப்போராட்டம் சிஐடியு தலை வர்களான விஜேந்தர் மெஹ்ரா, பாலக் ராம் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலோடும், வால்மீகி சபா மற்றும் மாநகராட்சி நிரந்தரத் தொழி லாளர் சங்கங்களின் வர்க்க ஒருமைப் பாட்டோடும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறையினால் நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர் களின் உரிமைகள் நசுக்கப்பட்டு வரும் வேளையில், சிம்லா தொழி லாளர்களின் இந்த ஒழுங்குபடுத்தப் பட்ட கூட்டுப் போராட்டம் மிக முக்கிய வர்க்க வெற்றியாகும்.