வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி
8 May 2026, 10:01 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி

சிம்லா தூய்மைப் பணியாளர்களின் தீரமிக்க அறப்போர்

சிம்லா, மே 8- இந்தியாவின் மலைப்பிர தேசங்களிலும், சுற்றுலா மையங் களிலும் உழைக்கும் வர்க்கத்தின் மீதான சுரண்டல் புதிய வடிவங் களை எடுத்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில், நகரத்தைச் சுத்தமாக வைத்திருக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதா ரத்தைப் பறிக்கும் நிர்வாகத்தின் நட வடிக்கைகளுக்கு எதிராக ஒரு மாபெரும் போராட்டக் கனல் மூண்டுள்ளது. வடஇந்தியத் தொழிலாளர் எழுச்சித் தொடரின் இந்தப் பகுதியில், சிம்லா நகராட்சி நிர்வாகத்தின் தொழி லாளர் விரோதப் போக்கைக் கண்டி த்துத் தூய்மைப் பணியாளர்கள் முன்னெடுத்துள்ள கிளர்ச்சியைக் காண்போம். சிம்லா நகரின் சுற்றுச்சூழல், பாரம்பரியம் மற்றும் அழகு படுத்துதல் சங்கத்தின் (SEHB) கீழ் பணியாற்றும் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 சதவீத வருடாந்திர ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து ஆவேசமாகப் போராடி வரு கின்றனர். சிஐடியு மாநிலக் குழுவின் தலைமையில் திரண்டுள்ள தொழி லாளர்கள், நகராட்சி நிர்வாகத்தின் இந்த ஒருதலைப்பட்சமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக மே 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். நிர்வாகத்தின் துரோகமும் பொருளாதார இழப்பும் கடந்த ஏப்ரல் 4 அன்று நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 சதவீத வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் 15 நாட்கள் சிறப்பு விடுப்பு ஆகியவற்றை ரத்து செய்ய முடி வெடுக்கப்பட்டது.

இதற்குப் பதிலாக வெறும் 3 சதவீத அகவிலைப்படியை மட்டும் வழங்குவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த மாற்றத்தி னால் ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதம் 700 முதல் 1000 ரூபாய் வரை நேரடி ஊதிய இழப்பு ஏற்படும்.

3 சதவீத அகவிலைப்படி என்பது வழக்கமான ஊதிய உயர்வுடன் கூடுதலாக வழங்கப்பட வேண்டியதே தவிர, அதற்கு மாற்றாக இருக்க முடியாது என்று சங்கத் தலைவர்கள் வாதிடுகின்றனர்.

தொழிலாளர் நல அலுவலகத்தில் 32 அம்சக் கோரிக்கைகள் குறித்த சமரசப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, எவ்வித முன்னறிவிப்புமின்றிச் சேவை விதிமுறைகளை மாற்றியது தொழி லாளர் சட்டங்களுக்கு எதிரானது எனச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

எழுச்சி பெற்ற பொதுக்குழு கூட்டம் இந்த அநீதிக்கு எதிராகச் சிம்லாவின் காளிபாரி ஹாலில் மாபெரும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் குப்பை சேகரிப்பவர்கள், மேற்பார்வையாளர்கள், சாலைப் பெருக்குபவர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என அனைத்துத் தரப்பு பணியாளர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய சிஐடியு மாநிலத் தலைவர் விஜேந்தர் மெஹ்ரா, மாவட்டச் செயலாளர் விவேக் காஷ்யப் மற்றும் சங்கத் தலைவர்கள், நிர்வாகத்தின் போக்கைக் கடுமையாகச் சாடினர்.

“பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் குப்பை வரி ஆண்டுதோறும் 10 சதவீதம் உயர்த்தப்படும் நிலையில், அந்த வேலையைச் செய்யும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வை மட்டும் ரத்து செய்வது என்ன நியாயம்?” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

சுரண்டலும் வீண் விரயமும் கடந்த சில ஆண்டுகளில் தூய்மைப் பணியாளர்களின் வேலைப்பளு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

முன்பு ஒரு தொழிலாளி 80 வீடுகளைக் கவனித்து வந்த நிலையில், தற்போது அது 300 வீடுகளாக உயர்ந்துள்ளது.

ஆனால், தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த மறுக்கும் நிர்வாகம், ‘கியூ.ஆர் கோடு’ மூலம் வீடுகளைக் கண்காணிக்கும் திட்டத்திற்காக 2.5 கோடி ரூபாயை வீணாக்குவதாகத் தொழிலாளர்கள் சாடினர்.

அந்தப் பணத்தைக் கொண்டு 150 புதிய தொழிலாளர்களை நியமித்து வேலைப்பளுவைக் குறைத்திருக்கலாம் அல்லது போனஸ் சட்டத்தின் கீழ் தொழி லாளர்களுக்கு முறையான நிலுவைத் தொகையை வழங்கியிருக்கலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கோரிக்கைகள் தொழிலாளர்களின் 32 அம்சக் கோரிக்கைப் பட்டியலில் பின்வருவன மிக முக்கியமானவை: குறைந்தபட்ச மாத ஊதியமாக 26,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும்.

போனஸ் சட்டம் 1965-இன் படி முறையான போனஸ், பணிக்கொடை (Gratuity) மற்றும் நிலுவையில் உள்ள ஈபிஎஃப் (EPF) தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டும். அவுட்சோர்சிங் முறையை ஒழித்து, SEHB பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். 1

5-ஆவது இந்திய தொழிலாளர் மாநாட்டின் பரிந்துரைகள் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ வழங்க வேண்டும்.

இறுதி எச்சரிக்கை மே மாதம் வழங்கப்படும் ஏப்ரல் மாத ஊதியத்தில் 10 சதவீத உயர்வு இல்லையென்றால், மே 15 முதல் ஒட்டுமொத்த நகரமும் ஸ்தம்பிக்கும் வகையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும் எனச் சங்கத் தலைவர் ஜஸ்வந்த் சிங், பொதுச்செயலாளர் ஓம் பிரகாஷ் கர்க் ஆகியோர் நகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர்.

சிம்லா தூய்மைப் பணி யாளர்களின் இந்தப் போராட்டம், வெறும் ஊதியத்திற்கான போராட்டம் மட்டுமல்ல; அது தாராள மயக் கொள்கைகளால் நசுக்கப் படும் உழைக்கும் மக்களின் கண்ணி யத்தைப் பாதுகாப்பதற்கான போர்.

வடஇந்தியா முழுவதும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் திட்டப் பணியாளர்கள் (Scheme Workers) மத்தியில் எழுந்துள்ள இந்த விழிப்புணர்வு, கார்ப்பரேட் சார்பு அரசுகளுக்கு விடுக்கப் பட்டுள்ள மாபெரும் எச்சரிக்கை யாகும்.

லெப்ட் வியூஸ்