முந்தய பக்கம்

கேரளத்தின் இடுக்கியிலும் ஷிகெல்லா தொற்று

16 Jun 2026, 8:48 pm
கேரளத்தின் இடுக்கியிலும் ஷிகெல்லா தொற்று

கேரளத்தின் இடுக்கியிலும் ஷிகெல்லா தொற்று

தமிழ்நாட்டின் எல்லையான கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் 2 பேருக்கு ஆட் கொல்லி நோயான ஷிகெல்லா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதிகாரிகளின் கூற்றுப்படி, கஞ்சிகுழி பஞ்சாயத்து எல்லைக்குட் பட்ட நான்கு மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு குழந்தைகளுக்கு இந்தத் தொற்று கண்டறியப் பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒருவர் இடுக்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மற்றொரு குழந்தை தொடுபுழாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப் பட்டுள்ளனர். குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டுமே ஷிகெல்லா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இடுக்கியிலும் தொற்று பரவியதற்கான காரணம் குறித்து கேரள சுகாதாரத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. பாதிப்புகள் உறுதி செய்யப் பட்டதைத் தொடர்ந்து, நிலைமையை திறம்பட கையாள்வதற்குக் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உள்ளதாகச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram