மாணவர்கள் வாடகை வீட்டில் தங்கும் அவலம்: செங்கோட்டையில் இடிக்கப்பட்ட அரசு மாணவர் விடுதியை புதிதாக கட்டித்தருக!
28 Oct 2026, 8:37 pm
<p><strong>மாணவர்கள் வாடகை வீட்டில் தங்கும் அவலம்: செங்கோட்டையில் இடிக்கப்பட்ட அரசு மாணவர் விடுதியை புதிதாக கட்டித்தருக! </strong></p><p>தென்காசி, அக். 28-தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த அரசு மாணவர் விடுதி தற்போது இடிக்கப்பட்டு தரைமட்டமாகக் கிடக்கிறது. அந்த இடத்தில் புதிய விடுதியைக் கட்டித்தர அரசும் மாவட்ட நிர்வாகமும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து கட்சியின் தென்காசி மாவட்டச் செயலாளர் உச்சிமாகாளி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: .அரசு மாணவர் விடுதி இல்லாததால், செங்கோட்டை பேருந்து நிலையம் அருகேவாடகை வீட்டில் மாணவர்கள் தங்கிப்படித்து வருகின்றனர். அங்கு மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாததால், அவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.</p><p>மாணவர்களின் கல்வி மற்றும் நலனைக்கருத்தில் கொண்டு, செங்கோட்டையில் அரசு மாணவர் விடுதியை மீண்டும் கட்டுவதற்கு தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, மாணவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட நிரந்தர விடுதி கிடைப்பதைஉறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>
