முந்தய பக்கம்

முத்தூர் அருகே தெரு நாய்கள் கடித்து ஆடுகள் பலி

10 Dec 2025, 4:08 pm
முத்தூர் அருகே தெரு நாய்கள் கடித்து ஆடுகள் பலி
<p><strong>முத்தூர் அருகே தெரு நாய்கள் கடித்து ஆடுகள் பலி</strong></p> <p>திருப்பூர், டிச. 10 - திருப்பூர் மாவட்டம் முத் தூர் அருகே அமராவதிபா ளையம் காரக்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்தவர் முத்தப்பன் (வயது 63). விவ சாயியான இவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து 10க்கும் மேற்பட்ட &nbsp;செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலை யில் செவ்வாயன்று காலை &nbsp;கம்பிவேலி அமைக்கப்பட்ட தனது தோட்டத்தில் இந்த ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டி ருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 3 தெருநாய்கள் தோட் டத்துக்குள் புகுந்து மேய்ந்து கொண்டிருந்த செம்மறி ஆடு களைக் கடித்துக் குதறின. இதில் 6 ஆடுகள் உயிரிழந்தன. &nbsp;இது குறித்து தகவல் அறிந்து காங்கேயம் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரி ழந்த ஆடுகளைப் பார்வையிட்டனர். இறந்த ஆடுகளைப் பரி சோதனை செய்து குழி தோண்டி புதைக்கப்பட்டன. படுகாயம் &nbsp;அடைந்த இரு ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram