கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
30 Jan 2026, 5:56 pm

ஆடுகளை வேட்டையாடும் விலங்கு

ஈரோடு, ஜன.30- வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், அடையாளம் தெரியாத விலங்குகள் ஆடுகளை வேட்டையாடி வரும் சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்ப டுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள அத்தாணி காலனி, வெங்கிடு தோட்டத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (50). அந்தியூர் வனத்தை ஒட்டியுள்ள இவரது தோட்டத்து வீட்டில் வளர்த்து வந்த 2 ஆடுகள், 4 கோழிகளை அடையா ளம் தெரியாத விலங்குகள் கடித்து உயிரிழந்தது வியாழ னன்று தெரியவந்தது. இதுகுறித்த தகவலறிந்து அத்தாணி பிரிவு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, விலங்கு வந்து சென்ற பாதையில் காலடித் தடங்களை ஆய்வு செய்த னர். மேலும், வன விலங்கின் நடமாட்டத்தை கண்டறிய இரு வேறு இடங்களில் தானியங்கி கேமராக்களையும் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இதேபோன்று, அம்மாபேட் டையை அடுத்த ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையம், பந்தல் கரட்டை சேர்ந்த சின்னு (75) என்பவர், தனது 7 ஆடுகளை பாலமலை அடிவாரத்திலுள்ள பட்டியில் அடைத்து வைத்தி ருந்தார். இந்நிலையில், புதனன்று இரவு பட்டிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத விலங்கு, 2 ஆடுகளைக் கடித்து கொன்றதோடு, ஒரு ஆட்டை வனத்துக்குள் இழுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சென்னம்பட்டி வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோலார் அமைக்க மானியம் வழங்க விசைத்தறி கூட்டமைப்பு கோரிக்கை

கோவை, ஜன.30: நலிவடைந்து வரும் விசைத்தறி தொழிலை மீட்டெடுக்க, வரும் ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் சோலார் மின் தகடு கள் அமைக்க 50 சதவீத மானியம் வழங்க வேண்டும் என கோவை - திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலை வர் பூபதி கூறியதாவது, பிப்ரவரி 1-ஆம் தேதி ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக் கல் செய்யப்பட உள்ளது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2 லட்சத் திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் 90 சதவீதத்திற்கும் அதிக மான தறிகள் கூலிக்கு நெசவு செய்யும் முறை யிலேயே செயல்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாகவே விசைத்தறிகளுக்கு சோலார் மின் தகடுகள் (Solar Panels) பொருத்துவதற்கு ஒன்றிய அரசு மானியம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியு றுத்தி வருகிறோம். கடந்த மாதம் கூட ஒன்றிய நிதி அமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்து விரிவான கோரிக்கை மனுவை அளித்துள் ளோம். இந்திய அளவில் 25 லட்சம் விசைத்தறி களும், தமிழகத்தில் 5 லட்சம் விசைத்தறி களும் உள்ளன. குறிப்பாக மேற்கு மண்டலத் திலுள்ள 2 லட்சம் விசைத்தறிகளை நம்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது மின் கட் டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்க ளால் இத்தொழில் கடும் நலிவைச் சந்தித்து வருகிறது “அழிவு நிலையில் உள்ள விசைத் தறி தொழிலைப் பாதுகாக்கவும், நெசவாளர் களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும், சோலார் மின் தகடுகள் அமைக்க மத்திய அரசு குறைந்தபட்சம் 50 சதவீத மானியம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போது பயன்பாட்டில் உள்ள விசைத் தறிகள் அனைத்தும் பழைய மாடல்களாகவே உள்ளன. இவற்றை நவீனப்படுத்தவும், நாடா இல்லா தறிகளாக (Shuttleless Looms) மாற்றவும் அரசின் உதவி அவசியமாகும். தமி ழக அரசு ஏற்கனவே 3,000 தறிகளை நவீனப் படுத்த 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய் துள்ளது. மாநில அரசின் இந்த முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில், ஒன்றிய அரசும் நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே இத்தொ ழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். எனவே, இந்த பட்ஜெட்டில் விசைத் தறி தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக் கையை ஏற்று உரிய அறிவிப்புகளை வெளி யிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

உதகை, ஜன.30- 14 வயது சிறுமியை பாலியல் வன்கொ டுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது மகள், அதேபகுதியிலுள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்.21 ஆம் தேதியன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி, இரவு தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் சிறு மியை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் சிறுமி இல்லாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கூடலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதை யடுத்து நடைபெற்ற விசாரணையில், சிறு மியை அதேபகுதியை சேர்ந்த கலைச்செல் வன் (25) என்பவர் ஏமாற்றி, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி திருப்பூ ருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொ டுமை செய்துள்ளார். இதில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட் டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கலைச் செல்வனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விசா ரணை முடிந்து வியாழனன்று வழங்கப் பட்ட தீர்ப்பில், கலைச்செல்வன் மீதான குற் றச்சாட்டு நிருபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயி ரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க நீதி பதி பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து கலைச்செல்வன் கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.செந்தில்குமார் ஆஜ ராகி வாதாடினார்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

உதகை, ஜன.30- சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, உத கையில் நடைபெற்ற விழிப்பு ணர்வு பேரணியில் பலர் கலந்து கொண்டனர். சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, நீல கிரி மாவட்ட, வட்டார போக் குவரத்து அலுவலகம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முகாம் கள் நடைபெற்று வருகின் றன. இதன்ஒருபகுதியாக, வெள்ளியன்று உதகை மத் திய பேருந்து நிலையத்திலி ருந்து கமர்சியல் சாலை வரை மாணவ மற்றும் பொது மக்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. இப்பேரணியை, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் நிஷா, வட்டார போக்கு வரத்து அலுவலர் பிரபாக ரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம்

கோவை, ஜன.30- 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண் டும் என வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வெள்ளி யன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்ற இந்த உண்ணா விரதப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தின் போது, தனியார் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும். தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வருடாந்திர ஊதிய உயர்வு 16 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும், தாமதமின்றி குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், 8 மணி நேர வேலை முறையை அமல் படுத்த வேண்டும். பணியின் போது உயிரிழக்கும் ஊழியர்க ளின் குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும், நிர்வாக காப்பீட்டுத் தொகையாக 20 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இப்போராட்டத் தில் வலியுறுத்தப்பட்டன.

இன்று மின்தடை

தருமபுரி, ஜன.30- தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் துணை மின் நிலை யத்தில் சனியன்று (இன்று) பராமரிப்புப் பணிகள் நடைபெற வுள்ளது. இதனால் கிருஷ்ணாபுரம், கன்னிப்பட்டி, இண்ட மங்கலம், வன்னியகுளம், திப்பம்பட்டி, எம்.கே.புதூர், முருங் கப்பட்டி, நாகசமுத்திரம், புழுதிக்கரை, சவுளுப்பட்டி, வகுத் துப்பட்டி, பி.மோட்டுப்பட்டி, சி.மோட்டுப்பட்டி, காட்டம்பட்டி, ஒன்னியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சனியன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்கா தென தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்: ரூ.12.12 கோடி அபராதம்

உதகை, ஜன.30- நீலகிரி மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதற்காக ரூ.12 கோடியே 12 லட்சத்து 45 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப் பாளர் என்.எஸ்.நிஷா வெளியிட்டுள்ள அறிக் கையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பர் வரை பதிவு செய்யப்பட்ட வழக்குக ளில் 85 சதவிகிதம் கண்டுபிடிக்கப்பட்டு, சம் பந்தப்பட்ட நபர்களை கைது செய்து நீதி மன்றக் காவலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள னர். கடந்தாண்டில் 209 சாலை விபத்து வழக்கு கள் பதிவாகியுள்ளன. சாலை விதிகளை மீறி யதற்காக 1 லட்சத்து 67 ஆயிரத்து 337 மோட் டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. இதில் 1,288 வழக்குகள் மது போதை யில் வாகனம் ஓட்டியதற்காகவும், 500 வழக்கு கள் அதிவேகமாக வாகனங்களை இயக்கிய தற்காகவும், 1,331 வழக்குகள் அபாயகர மாக வாகனம் ஓட்டியதற்காகவும் பதிவு செய் யப்பட்டு, ரூ.12.12 கோடி அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

இரண்டு சிறு ஜவுளிப்பூங்கா தொடக்கம்

திருப்பூர், ஜன.30- திருப்பூர் மாவட்டத்தில் சிறிய அளவி லான ஜவுளிப் பூங்கா திட்டத்தின் மூலம் ஐந்து ஜவுளிப் பூங்காக்களுக்கு அனுமதி வழங்கப் பட்டு இரண்டு சிறு ஜவுளிப் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. அவிநாசி அருகே அசநல்லிபாளையம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டம் பெருந் தொழுவு கிராமத்திலும் இந்த ஜவுளிப் பூங் காக்கள் கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப் பட்டுள்ளன. தமிழக அரசு கைத்தறி மற்றும் துணி நூல் துறை மூலம் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டம் செயல்படுத்தப்படு கிறது. இதன்படி, தொழில் முனைவோருக்கு, தகுதியான திட்டத் தொகையில் 50 சதவி கிதம் தொகை அதாவது அதிகபட்சம் ரூ.2.50 கோடி மதிப்பிற்கு அரசு மானியமாக வழங்கப் படுகிறது. இதன்படி பெருந்தொழுவில் ரூ.2.50 கோடி அரசு மானியத்தில் ரூ.20.16 கோடி யில் பி.வி.கே நிட்ஸ் பார்க் நிறுவனம் சிறிய அளவில் ஜவுளி பூங்காதிறக்கப்பட்டது. சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் 7 பூங்காக்கள் அமைத்திட உள்ள திருப்பூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களிடம் இருந்து விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டு, 5 பூங்காக் கள் அமைக்க அரசால் ஒப்புதல் வழங்கப் பட்டு 2 பூங்காக்கள் திறந்து வைத்து உற்பத்தி பணிகள் நடைபெற்று வருவதாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்ய ‘சைமா’ கோரிக்கை

கோவை, ஜன.30- உள்நாட்டு ஜவுளித் தொழிலை பாது காக்கவும், கோடிக்கணக்கான தொழிலா ளர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வும் பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய பஞ் சாலைகள் சங்கம் (சைமா) வலியுறுத்தியுள் ளது. இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செய லாளர் செல்வராஜ் கூறுகையில், ஜவுளித் துறையில் கடந்த சில ஆண்டுகளாக நீடிக் கும் இந்த 11 சதவீத இறக்குமதி வரி தொழில் துறையை மிகக் கடுமையாக பாதித்து வரு கிறது. கடந்த காலங்களில் சில குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்த வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டதால் மட்டுமே பெரும் உற்பத்தி இழப்பும், வேலைவாய்ப்பு பறிபோ வதும் தவிர்க்கப்பட்டது. குறிப்பாக, கடந்த சீசனில் வரி விலக்கு இருந்ததால் 70 லட்சம் பேல் பருத்தி இறக்குமதி செய்யப்பட் டது; ஒருவேளை இந்த வரி நீக்கப்பட்டி ருக்காவிட்டால் இறக்குமதி 25 லட்சம் பேலாக குறைந்திருக்கும் என்றும், அதன் விளைவாக சுமார் 25 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்திருப்பார்கள். தற்போதைய நிலவரப்படி, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த கன மழையால் உள்நாட்டுப் பருத்தியின் தரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. வழக்க மாக 75 சதவீதம் வரை கிடைக்கக்கூடிய உயர் தரப் பருத்தி, இந்த ஆண்டு 50 சதவீதத் திற்கும் குறைவாகவே கிடைப்பதாகப் பருத்தி ஆலோசனைக் குழு தெரிவிள் துள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி உள் நாட்டுச் சந்தையில் வியாபாரிகள் பருத்தி விலையை ஒரு கண்டிக்கு 4,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளனர். சர்வதேசச் சந்தையில் பிரேசில் போன்ற நாடுகள் 15 சதவீதம் குறை வான விலைக்கு பருத்தியை வழங்கும் நிலையில், வியட்நாம் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகள் அங்கிருந்து இறக்குமதி செய்து நமக்கு கடும் போட்டியை உரு வாக்குகின்றன. மார்ச் மாதத்துடன் பருத்தி சீசன் முடிவ டைய உள்ள நிலையில், ஏப்ரல் மாதத் திற்குப் பிறகு சுமார் 50 லட்சம் பேல் பருத்தி பற்றாக்குறை ஏற்படும் என அஞ்சப்படு கிறது. எனவே, ஜவுளி ஏற்றுமதியை மேம் படுத்தவும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இந்தியப் பொருட்களின் நிலையை உறுதிப்படுத்தவும் வரவிருக்கும் ஒன்றிய பட்ஜெட்டில் இந்த 11 சதவீத இறக்கு மதி வரியை முழுமையாக நீக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.