தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லியில் ‘ஷாஹீத் பகத் சிங் பவன்’ திறப்பு! சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

yesterday
தில்லியில் ‘ஷாஹீத் பகத் சிங் பவன்’ திறப்பு! சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

தில்லியில் ‘ஷாஹீத் பகத் சிங் பவன்’ திறப்பு! சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

புதுதில்லி தில்லி தரியாகஞ் பகுதியில் இந் திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் (டி.ஒய்.எப்.ஐ) புதிய மத்தியக் குழு அலுவலகம் சனிக் கிழமை திறக்கப்பட்டது. ‘ஷாஹீத் பகத் சிங் பவன்’ என்ற பெயரிலான இந்த அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி திறந்து வைத் தார்.

இந்நிகழ்வில் டிஒய்எப்ஐ பொதுச்செயலாளர் ஹிமக்னராஜ் பட்டாச்சார்யா, தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஏ.ஏ. ரஹீம், இந்திய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா, தலைவர் ஆதர்ஷ் எம். சாஜி, அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கனினிகா கோஷ், அகில இந்திய விவசாயிகள் சங்கத் துணைத்தலைவர் ஹன்னன் முல்லா, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தின் பொதுச்செயலாளர் பி. வெங்கட் மற்றும் சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய எம்.ஏ. பேபி, “நாடு முழுவதும் ஒரு வலுவான இளைஞர் இயக்கம் உருவாகி வரும் இக்காலக்கட்டத்தில், இளைஞர்களை ஒன்றுதிரட்டுவதில் எஸ்எப்ஐ மற்றும் பிற மாணவர் - வாலிபர்அமைப்புகளுடன் இணைந்து டி.ஒய்.எப்.ஐ மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. நாடு முழுவதும் தொடரும் இந்தப் போராட்டங்களுக்கும், வலுவான, ஒற்றுமையான மற்றும் முற்போக்கான வாலிபர் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் இந்த ‘ஷாஹீத் பகத் சிங் பவன்’ ஒரு முக்கிய மையமாக விளங் கும்” என அவர் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.