தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர் பேரவை தலைவராக அருந்ததி, செயலாளராக பி. நளசெல்வன் தேர்வு புதுச்சேரி பல்கலை.யில் அனைத்துப் பதவிகளையும் கைப்பற்றியது எஸ்எப்ஐ!

8 Oct 2026, 11:10 pm
மாணவர் பேரவை தலைவராக அருந்ததி, செயலாளராக பி. நளசெல்வன் தேர்வு புதுச்சேரி பல்கலை.யில் அனைத்துப்  பதவிகளையும் கைப்பற்றியது எஸ்எப்ஐ!

மாணவர் பேரவை தலைவராக அருந்ததி, செயலாளராக பி. நளசெல்வன் தேர்வு புதுச்சேரி பல்கலை.யில் அனைத்துப் பதவிகளையும் கைப்பற்றியது எஸ்எப்ஐ!

புதுச்சேரி, அக். 8 -புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக மாணவர் பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் அபார வெற்றியைப் பெற்றிருந்த இந்திய மாணவர் சங்கம் (SFI) இரண்டாம் கட்டத் தேர்தலில் நிர்வாகக்குழுவின் அனைத்துப் பொறுப்புக்களையும் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

தலைவர், செயலாளர், துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு இந்திய மாணவர் சங்கம் சார்பில் போட்டியிட்ட 15 வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழ கத்தில் 2026 - 27 கல்வி ஆண்டுக்கான மாணவர் பேரவை தேர்தலின், அக்டோபர் 1 அன்று நடைபெற்றது. இந்த முதற்கட்டத் தேர்தலில் துறை ரீதியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கானவாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், மொத்தமுள்ள 114 இடங்களில்,இடதுசாரி மாணவர் அமைப்பான, இந்திய மாணவர் சங்கம் 70 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வரலாற்று வெற்றியைப் பெற்றது.வலதுசாரி ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி 24 இடங்களிலும், அம்பேத்கர் மாணவர் அமைப்பு (ASF), மாணவர் காங்கிரஸ் - முஸ்லிம் மாணவர் அமைப்பு கூட்டணி 13 இடங்களிலும், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) ஓரிடத்திலும், சுயேட்சையாக நான்குமாணவர்களும் வெற்றி பெற்றனர்.இதையடுத்து, தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக்குழுவைத் தேர்ந்தெ டுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 7அன்றுநடைபெற்றது.

இதிலும், தலைவர், செயலாளர், இரண்டு துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர் மற்றும் 10 செயற்குழுஉறுப்பினர்கள் என அனைத்து பொறுப்புகளை இந்திய மாணவர் சங்கம் கைப்பற்றி யுள்ளது.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவராக ஜி. அருந்ததி நாத், துணைத்தலைவராக (ஆண்) கே.யுவராஜ், துணைத் தலைவராக (பெண்) கே. கோபிகா, செயலாளராக பி. நளசெல்வன், இணைச் செயலாளராக பிரவேஷ், செயற்குழு உறுப்பினர்களாக வி. சஞ்சய்,ஜெய்க் எம். தாமஸ், அசோக் குமார் ஜெயவேல், எம். நிவேத், ஆஷிக் ஹுசைன் பட், எம்.பி. அனகா, எப். டமாபி லாமின், கதீஜா சாதருதீன், நாரபகா அக்ஷிதா, எம். காவியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

மாணவர்களின் கல்வி உரிமை, ஜனநாயக உரிமை, சமூகநீதி மற்றும் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக வெளியை பாதுகாப்பதற்காக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கும், மாணவர்களிடையே இந்திய மாணவர்சங்கம் மேற்கொண்ட அமைப்புப் பணிகளுக்கும் கிடைத்த ஆதரவையே இந்தத் தேர்தல் முடிவு வெளிப்படுத்துகிறது.அந்த வகையில், மாணவர்கள் வழங்கிய இந்தப் பொறுப்பை முழுமையாக ஏற்று, மாணவர்களின் உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்திற்காகவும்,சமூகநீதிக் காகவும் மாணவர் பேரவையில் தொட ர்ந்து வலுவாக செயல்படுவோம் என்று இந்திய மாணவர் சங்கம்அறிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.