கேரள மருத்துவ பல்கலை. தேர்தல்களில் எஸ்எப்ஐ அபார வெற்றி கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியை 23 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றி சாதனை
6 Jul 2026, 9:13 pm

கேரள மருத்துவ பல்கலை. தேர்தல்களில் எஸ்எப்ஐ அபார வெற்றி கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியை 23 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றி சாதனை

கேரள சுகாதார அறிவி யல் பல்கலைக்கழ கத்துடன் (KUHS) இணைக்கப்பட்ட மருத்துவக் கல்லூ ரிகளில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில், இந்திய மாண வர் சங்கம் (எஸ்எப்ஐ) மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மருத்துவம், நர்சிங், ஆயுர்வேதம் மற்றும் பாரா மருத்துவக் கல்லூ ரிகளில் உள்ள பெரும்பாலான மாணவர் சங்கங்களை எஸ்எப்ஐ தன்வசப்படுத்தியுள்ளது.

இந்தத் தேர்தலின் மிக முக்கிய வெற்றியாக, கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியை 23 ஆண்டு களுக்குப் பிறகு எஸ்எப்ஐ கைப் பற்றியுள்ளது. கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் இங்கு அரசியல் சார் பற்ற சுயேச்சை மாணவர் குழுக்க ளே வென்று வந்த நிலையில், தற் போது எஸ்எப்ஐ புதிய வரலாறு படைத்துள்ளது. அதே போல கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரியை (பரியாரம்) யுடிஎஸ்எப் கூட்டணியிடமிருந்து எஸ்எப்ஐ அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது. மேலும், மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை 4 ஆண்டுகளுக்குப் பிறகும், திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியை வரலாற்றிலேயே முதல்முறையாகவும் எஸ்எப்ஐ வென்றுள்ளது.

தொடர் வெற்றிகள்

பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரியில் போட்டியின்றி இரண்டா வது முறையாக எஸ்எப்ஐ மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இதுதவிர, கொல்லம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆலப் புழா டி.டி. மருத்துவக் கல்லூரிகளி லும் எஸ்எப்ஐ அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து எஸ்எப்ஐ மாநிலச் செய லாளர் பி. சஞ்சீவ் மற்றும் மாநிலத் தலைவர் எம். சிவபிரசாத் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை யில்,“கேம்பஸ்களில் வன்முறை யைத் தூண்டவும், போதைப்பொ ருள் கும்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் முயன்ற கேஎஸ்யு உள்ளிட்ட வலதுசாரி மாணவர் அமைப்புகளின் முகத்திரையைக் கிழித்து, அவர்களை மாணவர் கள் முற்றிலுமாக நிராகரித்துள்ள தையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மாணவர் சமூகத் தின் இந்த ஆதரவு, வளாக ஜனநாய கத்தின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்து கிறது” என அவர்கள் கூறினர்.