தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

400 மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிய கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க எஸ்எப்ஐ வலியுறுத்தல்

2 Feb 2026, 3:32 pm
400 மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிய கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க எஸ்எப்ஐ வலியுறுத்தல்
<p><strong>400 மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிய கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க எஸ்எப்ஐ வலியுறுத்தல்</strong></p> <p>விருதுநகர், ஜன.2- விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் அருகே யுள்ள வி.பி.எம் மகளிர் கல் லூரி நிர்வாகம், பொய்யான விளம்பரங்களை வெளி யிட்டு மாணவர் சேர்க்கை நடத்தியுள்ளது. இதனால் &nbsp;சுமார் 200 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறி யாகியுள்ளது. இந்நிலை யில், கல்லூரி நிர்வாகம் மீது &nbsp;நடவடிக்கை எடுக்கக் கோரி &nbsp;இந்திய மாணவர் சங்கத்தி னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித் துள்ளனர். அதில் கூறியதாவது: கடந்த 2023 ஆம் ஆண்டு &nbsp;வி.பி.எம் மகளிர் கல்லூரி யில் மாணவர்களும் சேர லாம் என விளம்பரம் வெளி யிடப்பட்டது. இதனை நம்பி 175 மாணவர்கள் &nbsp;பல்வேறு பிரிவுகளில் சேர்ந்து படித்து வந்தோம். தற்போது 3 ஆம் &nbsp;ஆண்டு கடைசி பருவத் தேர்வு எழுத உள்ளோம். ஆனால், தற்போது வரை யாருக்கும் மதிப்பெண் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் வழங்கவில்லை. ஒவ்வொரு தேர்வின் போது கேட்டபோதும், 10 அல்லது 15 நாட்களில் வந்து விடும் &nbsp;என பொய்யான காரணத்தை &nbsp;கூறி வந்தனர். மகளிர் கல்லூரி என சான்றிதழ்களில் தந்தால் எப்படி நாங்கள் வேலைக்கு &nbsp;போக முடியும். மேலும், &nbsp;மாணவர்களை சேர்க்க முறையான அனுமதியை கல்லூரி நிர்வாகம் பெற வில்லையெனவும் தகவல் கள் வெளியாகியுள்ளன. இத னால் எங்களது எதிர்காலமே கேள்விக் குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முறையான அனுமதியை மதுரை காம ராஜர் பல்கலைக்கழகத்தில் &nbsp;பெறாமல் போலியான விளம் &nbsp;பரங்களை வெளியிட்டு மாணவர் சேர்க்கை நடத்தி &nbsp;முறைகேட்டில் ஈடுபட்டுள்ள னர். மேலும் எதிர்த்து கேள்வி &nbsp;கேட்கும் மாணவர்களுக்கு நிர்வாகம் கொலை மிரட்ட லும் விடுத்துள்ளது. எனவே, &nbsp;வி.பி.எம் கல்லூரி நிர்வா கத்தினர் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும். &nbsp;3 ஆண்டுகள் படித்து முடித்த &nbsp;மாணவர்களுக்கு செல்லத் தக்க மதிப்பெண் சான்றிதழ் &nbsp;களை &nbsp;வழங்கிட தமிழக அரசு &nbsp;உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதில் மாவட்டச் செய லாளர் ஆனந்தகுமார், முன் &nbsp;னாள் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.ஜெயபாரத் &nbsp;உள்ளிட்டோர் உடனிருந்த னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.