நீட், கியூட் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கம் கையெழுத்து இயக்கம் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்
6 Jun 2026, 10:49 pm
<p><strong>நீட், கியூட் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கம் கையெழுத்து இயக்கம் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்</strong></p><p>திண்டுக்கல், ஜூன் 6- நீட் மற்றும் கியூட் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் கையெ ழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தை திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் கையெ ழுத்திட்டு தொடங்கி வைத்தார். நீட் மற்றும் கியூட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்வுகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குளறுபடி களுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடை பெற்று வருகிறது. திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்வில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. தனது கையெ ழுத்தை பதிவு செய்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதேபோன்ற கையெ ழுத்து இயக்கம் பழனியிலும் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மிருதுளா, மாவட்டத் தலைவர் தீபக்ராஜ், மாவட்டச் செயலாளர் நிருபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நிர்வாகிகள் துர்கா தேவி, கீர்த்தி, குமார், சஞ்சய், முத்துமாணிக் கம், நலன், ஈழா, அப்துல் மஜீத் மற்றும் பலர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.</p>
