மாணவர் சங்க சேலம் மாவட்டப் பேரவை: நிர்வாகிகள் தேர்வு
29 Sept 2026, 2:07 am

மாணவர் சங்க சேலம் மாவட்டப் பேரவை: நிர்வாகிகள் தேர்வு

சேலம், செப்.28-இந்திய மாணவர் சங்க சேலம் மாவட்ட சிறப்புப் பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய மாணவர் சங்கம் சேலம் மாவட்ட சிறப்புப் பேரவை மற்றும் பயிற்சி முகாம் சனி மற்றும் ஞாயிறன்று ஏற்காட்டில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டார்வின் தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் மாணவர் சங்க மாநிலச் செயலாளர் கனகராஜ், முன்னாள் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ச.லெனின், முன்னாள் சேலம் மாவட்டத் தலைவர் பகத் சிங் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். வேலை அறிக்கை மாவட்டச் செயலாளர் பவித்திரன் முன் வைத்தார்.

இதனைதொடர்ந்து மாவட்டத் தலைவராக ஜீவானந்தம், செயலாளராக டார்வின் மற்றும் 27 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் சைலேஷ் அருள்ராஜ் நிறைவுரையாற்றினார். இதில், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.